Belly Fat Weight Loss Tips in Tamil: உடல் எடை பருமன் குறித்து பெண்கள் கூறுவது என்ன தெரியுமா?

என்ன இவ்வளவு வெய்ட் போட்டுட்ட? - கேள்வி கேட்டவர்களை சவுக்கடி அடித்த பெண்கள்.

weight loss tips opinion user

பெண்கள் கேலிக்குரியவர்களாக இருந்த காலம் மாறிவிட்டது அல்லது குறைந்துவிட்டது என்றாலும் எளிதில் கேள்விக்குறியவர்கள் என்ற நிலை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

பிறக்கும்போது ”பொம்பளப் பிள்ளையா பொறந்திருக்கு?” என்பதில் தொடங்கி கல்வி, திருமணம், வேலை, பணியிடம், குடும்பம், குழந்தைகள், முதுமைக்காலம் என வாழ்நாள் நெடுக நெருடலான கேள்விகளுக்கூடாகவே கடக்கிறது பெண்களின் வாழ்வு. அந்த வரிசையில், இப்படியான கேள்விகளுக்கு இந்த தலைமுறை பெண்கள் சொல்ல நினைக்கும் பதில் என்ன என்று தெரிந்துகொள்ள அவர்களிடம் சமூக வலைதளங்களில் ஹெர்சிந்தகி சார்பில் கேள்வி எழுப்பியிருந்தோம்.

என்ன கேட்டோம்?

கேள்வி: என்ன இவ்ளோ வெயிட் போட்டுட்ட?

இந்தக் கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் சொல்லும் பதில் என்னவாக இருக்கும்? என்று கேட்டிருந்தோம்.

அதற்கு நம் வாசகர்கள் அளித்த பதில்களில் தேர்வு செய்யப்பட்டவற்றின் தொகுப்பு இதோ,

என்ன பதில்கள்?

weight loss opinion

மாலினி: உனக்கென்ன பிரச்னைன்னு கேட்பேன்?

சீமா ஷ்யாம்: எனக்கு கோபம் வரும்…

கீர்த்தனா: ஆமா, நான் ஹெல்தியா சாப்பிடறேன். வெய்ட் போட்ருக்கேன் நு சொல்வேன்.

ஸ்வேதா ராஜன்: ஆமா, ஹார்மோனல் பிரச்னை. அதை இப்போ எதுவும் பண்ணா முடியாதுன்னு சொல்வேன்.

பாக்கியலட்சுமி: நா சந்தோஷப்படுவேன்

படி ஜோ: (I am happy that Iam chubby solven) நா இப்படி இருக்குறதால மகிழ்ச்சினு சொல்வேன்

என்விஆர் மனோகர்: நானே கவலப்படல நீங்க ஏன் கவலைப்படுறீங்கன்னு கேட்பேன்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் தெரியுமா?

உடல் பருமன் என்பது குறை அல்ல. அது தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடியது. உள்ளது உள்ளபடி நம் உடலை நாம் ரசித்தலே தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கான முதல்வழி என்கிறார் ஆரா உளவியல் மையத்தின் ஆலோசகர் கலைவாணி.

வாசக நேயர்களே! இந்தக் கேள்வியை ஹெர்சிந்தகி எழுப்பியதன் காரணமே, உடல் பருமன் குறித்த கேலி கிண்டல் என்பனவற்றைக் கடந்து ஆரோக்கியமான பொதுவெளி உரையாடல் தொடங்கப்பட வேண்டும் என்பதும் அவதூறுகள வந்தால் அவற்றைக் கடந்து செல்வதற்கான மனநிலை உருவாக வேண்டும் என்ற ஆவாவும்தான்.

இந்த முறை அதைச் சிறப்பாகச் செய்திருக்கீறீர்கள். அனைவருக்கும் ஹெர்ஷிந்தகி சார்பில் பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடர்ந்து உரையாடுவோம்…

அடுத்த கேள்வி: “பொம்பளப்பிள்ளை; ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல?” இந்தக் கேள்வியை யாராவது உங்களிடம்/உங்கள் தோழி/மகளிடம் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

இந்தக் கேள்விக்கு கீழ்க்கண்ட இணைப்பில் பதிலளிக்கலாம்.

https://www.facebook.com/photo.php?fbid=146236041577203

Images Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP