பெண்களுக்கு இடுப்பு வலி என்பது உலக பிரச்சனையாக உள்ளது. வேலை செல்லும் பெண்கள் தொடங்கி வீட்டில் இருக்கும் பெண்கள், நீண்ட தூரம் வாகனத்தில் பயணிக்கும் பெண்கள் என அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை இடுப்பு வலி. குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்பு இந்த வலி வீரியம் அடைகிறது. நிம்மதியாக தூங்க விடாமல் தொந்தரவு செய்கிறது. இதிலிருந்து உடனடி நிவாரணம் பெற பெண்கள் வலி நிவாரணிகளை எடுத்து கொள்கின்றனர்.
வயது முதிர்வு, ஓய்வின்மை, வாழ்க்கை மாற்றம், பயண நேரம் போன்ற பல காரணங்களால் பெண்களுக்கு இடுப்பு வலி பிரச்சனை ஏற்படுகிறது. எனவே, இந்த பதிவில் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் தரும் யோகா பயிற்சிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த யோகாசனங்களை தவறாமல் முறையாக செய்து வந்தால் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்
மர்ஜரியாசனம்
- விலங்குகளை போல் நிற்கக்கூடிய இந்த ஆசனம் இடுப்பு வலிக்கு நல்ல தீர்வை தருகிறது.
- உங்கள் கைகள் மற்றும் முழங்கால்களை டேப்லெட் நிலையில் வைக்கவும்.
- முழங்கால்கள் இடுப்புக்கு நேர் கீழே இருக்க வேண்டும். கைகள் தோள்பட்டைகளுக்கு நேர் கீழே இருக்க வேண்டும்.
- இந்த நிலையில் சில விநாடிகள் இருக்கவும்.
உத்தனாசனம்
- முதுகு , இடுப்பு வலியை போக்க தினமும் உத்தனாசனம் செய்யலாம்.
- கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தரையில் கால்களை நன்றாக ஊன்றி நேராக நிற்கவும்.
- இப்போது இடுப்பை வளைத்து மெதுவாக தலை குனியவும்.
- கால்கள் வளையாமலும் பார்த்துக் கொள்ளவும்.
- இப்போது கைகளை கால்களுக்கு பக்கவாட்டில் கொண்டுவந்து தரையில் ஊன்றி நிற்கவும்
- தலை உள்பக்கமாக பார்த்து இருக்க வேண்டும்.
- இந்த நிலையில் 10 விநாடிகள் தொடரவும்.
அபானாசனம்
- இரு முட்டிகளையும் இரு உள்ளங்கைகளால் பிடிக்கவும்.
- தரையில் இருந்து பாதங்களை உயர்த்தவும்.
- முழங்கை நேராக இருக்க வேண்டும்.
- இப்போது முழங்கையை சற்று மடக்கியவாறு முட்டியை மார்புக்கு அருகே கொண்டு வரவும்.
- முட்டியை மார்பின் அருகே கொண்டு வரும் போது இடுப்பு பகுதியைத் தூக்கக்கூடாது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation