மாதந்தோறும் இயற்கையாக நடக்கும் மாதவிடாய் செயல்முறையை பெண்களால் தவிர்க்க முடியாது. இருப்பினும் மாதவிடாய் வலியை குறைக்க இயற்கை பல அற்புத மூலிகைகளை தந்துள்ளது. மாதவிடாய் நாட்களில் தசை பிடிப்பு, முதுகு வலி, தலை வலி, மனநிலை மாற்றம், சோர்வு, பலவீனம் போன்ற பல அறிகுறிகளை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம். மேலும் ஒரு சிலருக்கு கடுமையான வலியும் இருகக்கூடும்.
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் இது போன்ற வலிகளை சமாளிக்க ஒரு சிலர் மருந்துகளின் உதவியையும் நாடுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் இது போன்ற வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இது போன்ற மாத்திரைகள் உங்களுக்கு வலியிலிருந்து நிவாரணம் கொடுத்தாலும், அவை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சிறுநீரகம் பலம் பெற என்ன உணவு சாப்பிடலாம்?
வலி நிவாரணி மாத்திரைகளுக்கு மாற்றாக இயற்கையான வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்வது நல்லது. அந்த வகையில் ஓமம் டீ மாதவிடாய் வலியை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது பற்றிய தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான முன்முன் கனேரிவால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஓமத்தில் உள்ள மருத்துவ குணம் காரணமாக, இது ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கொண்டு மாதவிடாய் வலி முதல் செரிமானம் வரை பல உடல் நல பிரச்சனைகளை சமாளிக்க முடியும். ஓமத்தில் நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற பல வகையான தாதுக்கள் உள்ளன.
ஓமம் சூடான விளைவைக் கொண்டிருப்பதால் கோடை காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிக்க வேண்டும். இதை 3-4 நாட்கள் வரை தொடர்ந்து எடுத்து கொள்ளலாம். குளிர்காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை வரை எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அஜீரணம், வாயு மற்றும் உப்புசம் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இதுபோன்ற சிரமங்களை நீங்களும் அனுபவித்தால், ஓமம் டீ உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களின் தைராய்டு அளவுகளை சீராக்கும் இயற்கை உணவுகள்
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் லேசான வலி இருக்கும். இருப்பினும் தாங்க முடியாத வலி நீடித்தால் அது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அல்லது வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனையின் அறிகுறிகளாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]