நடிகர் மாதவனா இது ? உடற்பயிற்சி இன்றி 21 நாட்களில் தொப்பை குறைப்பு

சாக்லேட் பாய் என அழைக்கப்பட்ட நடிகர் மாதவன் 21 நாட்களில் உடற்பயிற்சி இன்றி உடல் எடையை பெருமளவில் குறைத்துள்ளார். இது சாத்தியமா ? முழு விவரம் இங்கே...

actor madhavan intermittent fasting

நடிகர் மாதவனின் பேட்டியளித்த காணொளி ஒன்று உடற்பயிற்சி ஆர்வலர்களின் கவனத்தை பெற்றுள்ளது. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட படத்தில் நடிகர் மாதவன் கதாநாயகனாக நடித்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த படம் விண்வெளி துறையில் சாதிக்க துடிக்க நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஊந்துதல் அளிக்கும் வகையில் இருந்தது. நம்பி நாராயணன் போல் தத்ரூபமாக நடித்த மாதவனை பலரும் வெகுவாக பாராட்டினர். இறுதிச்சுற்று படத்தில் கட்டுமஸ்தான தோற்றத்தில் காணப்பட்ட அவர் நம்பி நாராயணனாக நடிக்க எடையை மேலும் அதிகரித்தார். ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தில் சூர்யாவிடம் பேட்டியளிக்கும் நம்பி நாராயணன் தொப்பையுடன் காணப்படுவார். மாதவனும் கச்சிதமாக அப்படியே காட்சியளிப்பார்.

இது தொடர்பாக காணொளி ஒன்றில் உடல் எடையை 21 நாட்களில் குறைத்ததாகவும் எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்யவில்லை எனவும் தெரிவித்தார். அந்த 20 விநாடி காணொளி சமூக வலைதளங்கில் வைரலான நிலையில் பலரும் இது சாத்தியமா என கேள்வி எழுப்பினர். இதற்கு நடிகர் மாதவன் தனது X சமூக வலைதள கணக்கில் ஆம் முடியும் என பதிலளித்துள்ளார்.

21 நாட்களில் எடையை குறைத்த விதம்

Intermittent fasting எனும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சாப்பிட்டு மீதி நேரம் விரத முறையை கடைபிடித்ததாக கூறியுள்ளார். உணவை நன்கு மென்று சாப்பிட்டதாகவும் மாலை 6.45 மணிக்கு முன்பாக இரவு உணவை முடித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அதிலும் மதியம் 3 மணிக்கு பிறகு பச்சையாக எந்த உணவை உட்கொள்ளவில்லை எனவும் சமைத்த உணவை மட்டுமெ உட்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அதிகாலையில் நீண்ட தூரம் நடைபயணம் செல்வது மற்றும் இரவு நேரத்தில் விரைவாக உறங்க சென்றதாகவும் தனது பதிவில் கூறியுள்ளார். உறங்க செல்லும் 90 நிமிடங்களுக்கு முன்பாக கணினி, செல்போன் போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை தவிர்த்தேன் என்கிறார் மாதவன்.

நிறைய திரவம், பச்சை காய்கறிகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்க வளர்சிதை மாற்றத்திற்கான உணவுகளை சாப்பிட்டதாக தெரிவிக்கிறார். இந்த நாட்களில் முற்றிலுமாக பதப்படுத்தப்பட்ட மற்றும் பாஸ்ட் ஃபுட் தவிர்த்தேன் - மாதவன்.

உடற்பயிற்சி இன்றி எடை குறைப்பு 21 நாட்களில் சாத்தியமா என்பது விவாத பொருளாக இருந்தாலும் மாதவன் பின்பற்றிய உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை வேறு யாராவது பின்பற்றினால் உடல்நலனில் பாதிப்பை ஏற்படாமல் இருக்குமா ? மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பெறாமல் திடீரென புதிய உணவுமுறை மாறுதலை செய்யாதீர்கள்.

இதுபோன்ற ஆரோக்கியம் சார்ந்த கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். எங்களை முகநூலில் தொடர HER ZINDAGI கிளிக் செய்யவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP