herzindagi
digestive problems big image

Indigestion Home Remedies:வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அட்டகாசமான டீ

வயிற்றில் வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் தொந்தரவு செய்தால் இந்த டீயைக் குடியுங்கள். சமையலறையில் உள்ள பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த தேநீர் செரிமானத்தை மேம்படுத்துகிறது
Editorial
Updated:- 2024-04-30, 14:38 IST

வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. உணவு சரியாக ஜீரணமாகாததால் வாயு, அமிலத்தன்மை மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உணவு சரியாக ஜீரணமாகாதபோது உடலுக்கு ஆற்றல் கிடைக்காமல், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மோசமான குடல் சார்ந்த பிரச்சனைகளால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. சில சிறப்பு மசாலாப் பொருட்கள், மூலிகைகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் சமையலறையில் கிடைக்கும் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் அத்தகைய டீயை கூடித்தால் போதும். இது குறித்து டயட்டீஷியன் மன்பிரீத் தகவல் அளித்து வருகிறார். மன்பிரீத் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளர்.

மேலும் படிக்க: கோடைக்காலத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பழத்தின் ஜூஸ் விறுவிறுவென உடல் எடையை குறைக்கும்

செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளை நீக்கும் தேநீர்

coriander seeds inside

  • கொத்தமல்லி விதைகள், இஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் இந்த தேநீர் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும்.
  • இந்த தேநீர் அமிலத்தன்மையை குறைத்து குடல்களை சுத்தப்படுத்துகிறது.
  • இதை குடிப்பதால் உடலில் நீர் தேங்குவது குறைந்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் இந்த தேநீர் பயனுள்ளதாக இருக்கும்.
  • கொத்தமல்லி விதைகள் வயிற்றில் பித்த அமிலத்தை உற்பத்தி செய்கின்றன இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
  • கொத்தமல்லி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வது செரிமான சாறு உற்பத்தியை அதிகரித்து கல்லீரல் நச்சுத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது.
  • கல்லீரலில் அதிக கொழுப்பு சேறும் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த டீ நல்லது.
  • அமிலத்தன்மை, வாயு மற்றும் மலச்சிக்கலை நீக்குவதில் இஞ்சி பயனுள்ளதாக இருக்கும்.
  • இது செரிமான தீயை அதிகரிக்கிறது மற்றும் உணவை உடைக்க உதவுகிறது.
  • எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் கல்லீரலை நச்சு நீக்குகிறது மற்றும் செரிமானத்திற்கு நல்லது.
  • எலுமிச்சையை அதிகமாக உட்கொள்வது செரிமானத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
  • குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க கொத்தமல்லி மற்றும் இஞ்சி டீ நல்லது.

தேவையான பொருள்கள்

  • கொத்தமல்லி விதை தூள் - 1/4 டீஸ்பூன்
  • இஞ்சி (துருவியது) - அரை அங்குலம்
  • தண்ணீர் - 200 மி.லி.
  • எலுமிச்சை - பாதி
  • கல் உப்பு - 1 சிட்டிகை

செய்முறை

ginger inside

  • கொத்தமல்லி விதை மற்றும் துருவிய இஞ்சியை தண்ணீரில் போட்டு பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும்.
  • இப்போது அதை ஒரு கோப்பையில் எடுக்கவும்.
  • அதனுடன் கல் உப்பு சேர்க்கவும்.
  • சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.
  • அது வெதுவெதுப்பாக இருக்கும் போது, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
  • சாப்பிடுவதற்கு முன் அதை குடிக்கவும்.

மேலும் படிக்க:  கோடையில் ஏற்படும் பிறப்புறுப்பு தொற்றைச் சரிசெய்ய எளிய குறிப்புகள்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]