ஒரே வாரத்தில் 3 கிலோ எடை குறைப்பு : ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுகளை சாப்பிட்டு வயதிற்கு ஏற்ப உடல் எடையை நிர்வகிப்பது அவசியம். 40 வயதை கடந்துவிட்டால் உடல் எடையில் தொடங்கி சாப்பிடும் உணவு வரை கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இளம் வயதில் உடல் எடை அதிகமாக இருந்தால் தொடர்ந்து உடற்பயிற்சி அல்லது உணவுமுறையில் மாற்றம் செய்து எடையைக் குறைக்கலாம். ஆனால் வயதான காலத்தில் அப்படி செய்ய முடியாது. உடல் எடையைக் குறைக்க விரும்பினாலும் அதை விரைவாக செய்வது கடினம். நோய்களுக்கு தொடக்கப்புள்ளி ஆக இருக்கும் உடல் எடையை விரைவாக குறைத்திட வேண்டும் என பலரும் நினைக்கின்றனர். விரைவாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்காக இந்த பதிவு எழுதப்படுகிறது. இதில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை பின்பற்றி நீங்கள் ஒரே வாரத்தில் 3 கிலோ எடையைக் குறைக்கலாம்.
சாப்பிடும் அளவில் மாற்றம்
உடல் எடையைக் குறைக்க நீங்கள் பட்டினி கிடக்க வேண்டும் என அவசியமில்லை. இதற்கு பதிலாக சாப்பிடும் அளவில் மாற்றத்தை கொண்டு வாருங்கள். அதாவது ஒரு மனிதனுக்கு சராசரியாக தினமும் ஆயிரத்து 800 முதல் 2 ஆயிரம் கலோரிகள் தேவை. இந்த அளவை மூன்று வேளையாக சாப்பிடுவதை தவிர்த்து காலை 7 மணி, காலை 11 மணி, மதியம் 2 மணி, மாலை 5 மணி, இரவு 7 மணி, இரவு 9 மணி என பசியெடுக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள். பட்டினி கிடந்து உடல் எடையைக் குறைப்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.
இனிப்புகளுக்கு பதிலாக பழங்கள்
உடல் எடையை குறைக்க நினைக்கும் போது தான் நம் கண்களில் பலவகையான இனிப்புகள் தென்படும். சிறியளவு இனிப்பு சாப்பிடாலும் அதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம். எனவே விரைவாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இனிப்புகளுக்கு பதிலாக பழங்கள் சாப்பிடும். பழங்களில் இயற்கையான இனிப்பு உள்ளது. இவை உங்களின் இனிப்பு தேவையை பூர்த்தி செய்யும்.
காலை உணவை தவிர்க்க கூடாது
எக்காரணத்திற்கும் காலை உணவை தவிர்க்காதீர்கள். காலை உணவு உடலில் வளர்சிதை மாற்றம் தொடங்குவதை உறுதிப்படுத்துகிறது. இதனால் பகலில் அதிகளவு கலோரிகளை எரிக்க முடியும். ஒரே வாரத்தில் 3 கிலோ எடையைக் குறைக்க இந்த வழி பயனளிக்கும்.
நொறுக்குத் தீனிகளுக்கு கட்டுப்பாடு
விரைவாக எடையைக் குறைக்க விரும்பினால் ஜங்க் ஃபுட், நொறுக்குத் தீனிகளுக்கு டாடா காண்பிக்கவும். சுண்டல், பாசிப்பயிறு அவியல், அவல், சத்தான பழங்கள் என ஆரோக்கியமான திண்படங்களுக்கு மாறுங்கள்.
நீங்கள் தினசரி உட்கொள்ளும் கலோரிகளின் அளவை கணக்கிடுங்கள். உடற்பயிற்சி செய்து கலோரிகளை எரிக்க முயற்சிக்கவும். காலையில் விரைவாக எழுந்து ஜாக்கிங் செல்லுங்கள், நடைபயிற்சி செய்யுங்கள். உடல் எடையைக் குறைப்பதற்கு முக்கியமான வழி என்னவென்றால் உடலில் உள்ள நச்சுகள், கொழுப்பு, கழிவுகளை வெளியேற்ற வேண்டும். இதற்கு இயற்கையான பானங்களை குடிக்கவும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்
பசியாக உணரும் போது ஏதாவது ஒரு உணவை சாப்பிடும் முன்பாக நிறைய தண்ணீர் குடிக்க முயற்சிக்கவும். இதனால் நீங்கள் சாப்பிடும் உணவின் அளவும் குறையும், ஜீரண கோளாறும் ஏற்படாது.
இந்தக் குறிப்புகளை பின்பற்றினால் உங்கள் எடையில் ஒரு பெரிய வித்தியாசத்தை விரைவில் பார்க்க வேண்டும். இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation