herzindagi
image

பிடிவாதமான தொப்பை கொழுப்பை கரைக்க; இந்த பயிற்சிகளை வீட்டில் செய்து பாருங்க

இந்த விடப்பிடியான தொப்பை கொழுப்பைக் குறைக்க பொதுவாகவே கடின உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால், சரியான உணவு மற்றும் வீட்டில் செய்யக்கூடிய எளிய பயிற்சிகள் மூலம் இதை எளிதாக குறைக்கலாம் என்பது பலருக்கும் தெரியாது. 
Editorial
Updated:- 2025-05-29, 18:14 IST

பெரும்பாலான பெண்களுக்கு வயிற்று கொழுப்பை குறைப்பது ஒரு பெரிய சவாலான பணியாக இருக்கிறது. உடல் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பை கொழுப்பு உடல் தோற்றத்தை கெடுப்பது மட்டுமல்லாமல், பல நோய்களையும் ஏற்படுத்தும். நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உடலில் ஹார்மோன்கள், வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் இருப்பது எப்படி அவசியமோ அதே போல உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. இந்த விடப்பிடியான தொப்பை கொழுப்பைக் குறைக்க பொதுவாகவே கடின உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால், சரியான உணவு மற்றும் வீட்டில் செய்யக்கூடிய எளிய பயிற்சிகள் மூலம் இதை எளிதாக குறைக்கலாம் என்பது பலருக்கும் தெரியாது. அந்த வரிசையில் தொப்பை கொழுப்பை குறைக்க பெண்களுக்கான 5 எளிய வீட்டு பயிற்சிகளை பற்றி இங்கு பார்ப்போம்.

கிரஞ்சஸ் (Crunches):


கிரஞ்சஸ் என்பது வயிற்று தசைகளை பலப்படுத்தும் சிறந்த பயிற்சி. இதை செய்வதன் மூலம் வயிற்று கொழுப்பு குறையும்.


எப்படி செய்வது?

 

  • முதுகில் படுத்து, முழங்கால்களை வளைத்து, கால்களை தரையில் ஊன்றவும்.
  • கைகளை தலைக்கு பின்னால் வைத்து, மேல் உடலை மெதுவாக முன்னால் உயர்த்தவும்.
  • இதற்கு பிறகு மெதுவாக கீழே இறங்கவும்.
  • இதை 15 அல்லது 20 முறை 3 செட்கள் செய்யவும்.

crunches

ரஷியன் ட்விஸ்ட் (Russian Twist):


இந்த பயிற்சி வயிற்று பக்க தசைகளை இயக்கி கொழுப்பை குறைக்க உதவுகிறது.


எப்படி செய்வது?

 

  • தரையில் உட்கார்ந்து, கால்களை முன்னால் நீட்டவும்.
  • உங்கள் முதுகை 45 டிகிரி கோணத்தில் வளைத்து, கைகளை ஒன்றாக பிடித்து பக்கவாட்டில் திருப்பவும்.
  • ஒவ்வொரு பக்கமும் 15 - 20 முறை செய்யவும்.

பர்பீஸ் (Burpees):


பர்பீஸ் என்பது முழு உடல் பயிற்சி. இது உடலில் கலோரி எரிப்பதற்கு சிறந்தது.


எப்படி செய்வது?

 

  • நேராக நின்று கொண்டு, குனிந்து, கைகளை தரையில் வைக்கவும்.
  • கால்களை பின்னால் தள்ளி, புஷ்-அப் நிலைக்கு வரவும்.
  • மீண்டும் குனிந்து, குதித்து எழுந்து கைகளை மேலே தூக்கவும்.
  • இதை 10 - 12 முறை செய்யவும்.

burpees

லெக் ரெய்ஸ் (Leg Raises):


இந்த லெக் ரெய்ஸ் பயிற்சி கீழ் வயிற்று தசைகளை பலப்படுத்த உதவும்.


எப்படி செய்வது?

 

  • உங்கள் முதுகில் படுத்து, கைகளை பக்கவாட்டில் வைக்கவும்.
  • கால்களை நேராக உயர்த்தி, 45 டிகிரி கோணத்தில் வைக்கவும்.
  • பிறகு மெதுவாக கீழே இறக்கவும் (தரையை தொடாதீர்கள்).
  • இதை 12-15 முறை செய்யவும்.

மவுண்டன் க்ளைம்பர் (Mountain Climber):


இது ஒரு கார்டியோ மற்றும் வயிற்று பயிற்சி. இது தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும்.


எப்படி செய்வது?

 

  • முதலில் புஷ்-அப் நிலையில் தொடங்கவும்.
  • ஒரு கால் முன்னால் கொண்டு வந்து, மாற்றி உங்கள காலை வேகமாக மாற்றவும்.
  • இதை 30 விநாடிகள் தொடர்ந்து செய்யவும்.

mountain climbers

இந்த 5 எளிய வீட்டு பயிற்சிகளை தினமும் செய்தால், வயிற்று கொழுப்பு எளிதில் குறையும். மேலும், சீரான உணவு மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இது போன்ற பயிற்சிக்கு முன் வார்மப் அப் செய்யவும், உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப பயிற்சிகளை மாற்றிக் கொள்ளவும்.

Image source: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]