குழந்தை பேறு விரும்பும் பெண்களுக்கு உதவும் மகா பந்தா! தினமும் பயிற்சி செய்யுங்க...

குழந்தை பேறு விரும்பும் பெண்களுக்கு இந்த மகா பந்தா பயிற்சி மிகவும் உதவிகரமாக இருக்கும். கருத்தரிப்பதற்கு மகா பந்தா பயிற்சியை தினமும் 5-6 முறை செய்யுங்கள். 

maha bandha technique

உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாக பார்க்கப் போவது மகா பந்தா. இது பெண்களுக்கு மிகவும் முக்கியமான யோகாவாகும். ஆண்களும் இதை பயிற்சி செய்யலாம். ஜலந்தரா பந்தா, உத்தியான பந்தா, மூல பந்தா ஆகியவற்றை சேர்த்து செய்வதே மகா பந்தா. குழந்தை பேறு விரும்பும் பெண்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வது நல்லது. ஆண்கள் இந்த பயிற்சி செய்தால் விந்தணு குறைபாட்டிற்கு தீர்வு காண முடியும். தாம்பத்ய உறவிலும் எதிர்பார்த்த சுகம் கிடைக்கும். உடலில் இருந்து நச்சுக்களை நீக்கவும் மகா பந்தா உதவும். வயதானவர்கள் இதை பயிற்சி செய்வதாக இருந்தால் இருக்கையை பயன்படுத்தவும். அர்த்த பத்மாசனம், பத்மாசனம், சுகாசனம், வஜ்ராசனம் நிலைகளில் இருந்து மகா பந்தா பயிற்சியை தொடங்கவும்.

maha bandha steps

மகா பந்தா பயிற்சி

  • பத்மாசனம் நிலையில் இருந்து ஆரம்பிக்கலாம். இந்த பயிற்சியை நீண்ட நேரம் செய்ய வேண்டி இருக்கும். எனவே பத்மாசனம் நிலையில் அமர்வதற்கு சிரமமாக இருந்தால் சுகாசனம் நிலையில் உட்காரவும்.
  • கைகளை மூட்டில் வைத்து முதுகுத் தண்டை நேராக்கி ஜலந்தரா பந்தாவில் இருந்து ஆரம்பிக்கவும். ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து தொண்டை குழியை லாக் செய்யவும். தாடை பகுதி கழுத்து பகுதியை தொட வேண்டும்.
  • அடுத்ததாக உத்தியான பந்தாவில் வயிற்று பகுதியை லாக் செய்யவும். அதன் பிறகு மூல பந்தாவில் பிறப்புறுப்பு, ஆசனவாய் பகுதியை சுருக்க முயற்சிக்கவும்.
  • இந்த நிலையில் பத்து விநாடிகளுக்கு அப்படியே இருக்கவும். அப்படியே ரிவர்ஸில் மூல பந்தாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பவும். லாக் செய்த வயிற்று பகுதியில் இருந்து மூச்சை விட்டு கழுத்தை மேலே உயர்த்தி லாக் செய்த தொண்டை பகுதியை விடுவித்து காற்றை வெளியிடவும்.
  • ஜலந்தரா பந்தா என்பது கழுத்து பகுதியை லாக் செய்வது, உத்தியான பந்தா என்றால் வயிற்று பகுதியை லாக் செய்வது, மூல பந்தா என்பது பிறப்புறுப்பு, ஆசனவாய் பகுதியை சுருக்குவது.
  • இந்த பயிற்சியை செய்யும் போது முழு கவனம் தேவை. எதையும் சிந்திக்காமல் கவனமாக 5-6 முறை தலா பத்து விநாடிகளுக்கு செய்யவும்.
  • ஜலந்தரா பந்தா தொண்டையில் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு தரும். உத்தியான பந்தா வயிறு பிரச்னைகளை சரி செய்திடும். குழந்தை பேறு கவலைக்கு மூல பந்தா தீர்வளிக்கும்.
  • இவை மூன்றும் உடலில் உள்ள நச்சுகளையும், கழிவுகளையும் எளிதில் வெளியேற்றிட உதவும்.

மகா பந்தா நன்மைகள்

  • பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் பகுதியை சுருக்கி இயல்பு நிலைக்கு திரும்பும் போது கருப்பை வாய், கர்ப்ப காலத்திற்காக இடுப்பு தசைகள் பலப்படும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
  • மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை இருந்தாலும் சீராகும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP