Yoga For Female Problems : பெண்களின் நோய்கள் தீர, தினமும் 10 நிமிடங்கள் மட்டும் யோகா செய்தால் போதும்!

பெண்கள் நீண்ட காலத்திற்கு இளமையாகவும் ஆரோக்கியத்துடனும் வாழ, தினமும் 10 நிமிடங்கள் மட்டும் யோகா செய்தால் போதும். இது உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்.

yogasanas for women problems

யோகா உடலுக்கும் மனதுக்கும் அமைதியையும், ஆற்றலையும் கொடுக்கிறது. மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரிய கலையான இந்த யோகாசனத்தை இளம் வயதிலிருந்தே குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். இளம் வயதிலிருந்து இது போன்ற பயிற்சிகளை செய்வது அவர்களின் மனதில் நேர்மறைவான விளைவை ஏற்படுத்தும். இதனால் அவர்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

யோகா செய்வதை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தன்னம்பிக்கை, சிறந்த ஆரோக்கியம், மன நிம்மதி, மனம் அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை போன்ற பல நல்ல பலன்களை காணலாம். யோகா செய்வதற்கு எந்த வித இயந்திரமும் தேவைப்படுவதில்லை. மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த யோகாசனம் மூலம் உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும். பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளான மன அழுத்தம், உடல் சோர்வு, முறையற்ற மாதவிடாய், போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த யோகாசனங்கள் உதவியாக இருக்கும்.

பெண்களின் உடல் நல பிரச்சனைகளை போக்கும் யோகாசனங்கள்

yoga for female

  • யோகா செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். இதனால் ஒருவருடைய கவனிக்கும் திறனும், உடல் ஆரோக்கியமும் மேம்படும். இரத்த ஓட்டம், நரம்பு மற்றும் சுவாச மண்டலம், செரிமான மண்டலம் போன்றவற்றிற்கு யோகாசனங்கள் மூலம் நல்ல விளைவுகளை காணலாம்.
  • வயது கூடும் பொழுது பெண்கள் யோகாசனம் செய்வதை வழக்கமாக்கி கொள்வது நல்லது. புஜங்காசனம் செய்வது உடலின் மேற்பகுதியை நீட்சி அடைய செய்து முகத்தின் பளபளப்பை அதிகரிக்கிறது
  • தனுராசனத்தை தினமும் செய்து வந்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது உடல் உடலை நீட்சி அடைய செய்து தோரணையை சீராக்க உதவுகிறது.
  • பட்டர்ஃபிளை போஸ் பெண்களுக்கு அதிகபட்ச நன்மைகளை தரும். இதை தினமும் செய்து வந்தால் ஒழுங்கற்ற மாதவிடாயை சீராக்கலாம். இதனுடன் தொடை மற்றும் கால்களின் தசைகளையும் வலுப்படுத்தலாம்.
  • வீரபத்ராசனம் செய்வதால் மார்பு, நுரையீரல், கழுத்து, வயிறு போன்ற உடலின் பகுதிகள் நீட்சி அடைகின்றன. மேலும் கால், தொடை மற்றும் முழங்கால் வலுப்பெறும்.
  • சலனாசனம் பெண்களுக்கு ஒரு அருமருந்து என்றே சொல்லலாம் இதை தொடர்ந்து செய்து வந்தால் கருப்பை மற்றும் சிறுநீரகம் வலுவடையும்
  • பெரும்பாலான பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் கொழுப்பு சேர தொடங்கும். உட்க்கடாசனத்தை செய்வதன் மூலம் உடல் பாகங்கள் வலுவடைவதோடு மட்டுமின்றி நல்ல உடல் வடிவமும் பெறலாம்.
yoga for women problem
  • பிராணயாமம் எனப்படும் சுவாச பயிற்சி மனதை தெளிவு படுத்தி நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது. இதை செய்வதால் உடலுக்கும் மனதிற்கும் அளவில்லாத நன்மைகள் கிடைக்கும்.
  • கவலை மன அழுத்தம் போன்ற மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தியானம் செய்யலாம். இது மனதை அமைதிப்படுத்தி தெளிவு பெறச் செய்கிறது.
  • கை அசைவுகளால் செய்யப்படும் இந்த முத்திரையைகள் ஐம்புலன்களுடன் தொடர்புடையவை. தியான முத்ரா, ஞான முத்ரா, யோனி முத்ரா, பிருத்வி முத்ரா போன்ற பல வகையான முத்திரைகளை செய்து பலன் பெறலாம். தியானம் பயிற்சி செய்யும் பொழுது முத்திரைகளையும் பயன்படுத்தலாம்.
  • யோனி முத்திரை செய்வது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  • சூரிய நமஸ்காரம், சந்திர நமஸ்காரம், ஜல நமஸ்காரம், வாயு நமஸ்காரம், பிரித்வி நமஸ்காரம் போன்ற ஆசனங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். பல தோரணைகளை உள்ளடக்கிய இந்த ஆசனங்களை செய்யும் பொழுது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுடன், உடல் எடையையும் குறைக்க முடியும்.

இந்த யோகாசனங்களின் உதவியுடன் நீங்கள் முதுமையிலும் இளமையாகவும் ஃபிட் ஆகவும் இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 30 வயதை கடந்தும் ஃபிட் ஆக இருக்க, தமன்னா செய்யும் யோகாசனங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP