கருப்பு நிற புடவைகளில் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் தமன்னா

பால் நிறத்தில் இருக்கும் தமன்னா கருப்பு நிற புடவையில் தங்கம் போல் ஜொலிக்கும் சில புகைப்படங்களை பார்க்கலாம். தமன்னாவின் இந்த ஸ்டைல் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் 
image

நடிகை தமன்னா அவரது உடைகளைத் தேர்வு செய்வதில் ஒரு நேர்த்தியான கலைநயம் இருக்கும். குறிப்பாக தமன்னாவின் சமீபத்திய தோற்றங்கள் அனைத்தும் கவரும் விதமாகவும், பேசும் விதமாகவும் ஆடைகளை அணிந்து அழகை வெளிப்படுத்தியுள்ளார். தமன்னாவின் நிறத்தை ஈடு செய்யும் விதமாக அவர்கள் அணியும் வண்ணமயமான ஆடைகள் அனைவரின் கண்களையும் பார்க்க செய்கிறது. குறிப்பான பெண்கள் புடனை அணிந்தால் அழகாகவும், ஒருவித கவர்ச்சியும் வெளிப்படுத்தும், அதேபோல் தமன்னாவின் நிறத்திற்கு ஏற்ற புடவைகள் அணிந்து கண்கள் சிமிட்டாமல் அவரை மட்டும் பார்க்கும் விதமாகத் தோன்றுவார். குறிப்பாக கருப்பு நிற ஆடைகளில் செக்கச்செவேலென கனிந்த பழம் போல் அழகை வெளிப்படுத்தவார். தமன்னா சமீபத்தில் கருப்பு புடவைகளில் வெளிப்படுத்திய தோற்றத்தைப் பற்றி பார்க்கலாம்.

கருப்பு பனாரசி புடவையில் தமன்னா

தமன்னா அணிந்து இருக்கும் இந்த சிக்கலான கோல்டன் ஜாரி வைத்து பனாரசி புடவையில் பேரழகியாகத் தெரிகிறார். குறிப்பாக எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ரவிக்கையில் இந்த புடவை நேர்த்தியாகப் பொருந்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பு பனாரசியை மேலும் அழகு சேர்க்கக் குந்தன் நகைகளை அணிந்திருந்தார். இந்த பனாரசி புடவை தமன்னாவிற்கு பொருத்தமாக அமைந்துள்ளது.

tamanna


Image Credit: pinterest


கருப்பு டிசைனர் புடவை

இந்த கருப்பு டிசைனர் புடவை தமன்னாவிற்கு கூடுதல் அழகை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. சில்வர் நிறம் புடவையில், கரும்பு பார்டர் அமைத்து, இந்த புடவை ஆடம்பரத்தையும், ஒரு வித எளிமையும் இருக்கும் விதமாக இருக்கிறது. இந்த புடவைக்கு வித்தியசமாக பூ வடிவில் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புடவையில் தமன்னா தேவதையில் மறு உருவமாக தெரிகிறார்.

tamanna 1

Image Credit: pinterest


கருப்பு மலர் புடவை

தமன்னா அணிந்திருக்கும் இந்த புடவை ஒரு பாரம்பரிய வகைகளில் ஒன்றாகும். அதன் சிக்கலான வடிவமைப்பு மற்றும் துடிப்பான வண்ணங்கள் தமன்னாவின் நிறத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தும் விதமாக அமைந்து இருக்கிறது. புடவை முழுவதும் விரிவான எம்பிராய்டரி, அடர் நீலம், சிவப்பு மற்றும் தங்க நிறங்கள் போன்ற வண்ணங்களின் கலவைகளைக் கொண்டுள்ளது. ப்ளவுஸ் கருப்பு ஸ்லீவ்லெஸ், தமன்னாவிற்கு மேலும் அழகை சேர்க்கிறது.

tamanna 3

Image Credit: pinterest

கருப்பு சிஃப்பான் புடவை

தமன்னாவின் அழகிய தோற்றத்தில் இந்த கருப்பு சிஃப்பான் புடவையும் இடம்பெற்றிருந்தார். இந்த புடவைக்கு ஏற்ற கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ரவிக்கையுடன் மேலும் அழகாய் இருக்கிறார். தமன்னாவின் தோற்றம் பார்க்க எளிமையாகவும் அதிநவீனமாகத் தோன்றும் விதமாக இருக்கிறது.

tamanna 2

Image Credit: pinterest

மேலும் படிக்க: மணப்பெண்களுக்கான 5 அசத்தலான காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP