காஞ்சிபுரம் பட்டுப் புடவை தென்னிந்தியாவின் கலாச்சாரம் மற்றும் புராணங்களுடன் பின்னிப் பிணைந்து போற்றப்படுகிறது. காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் பகுதியில் தயாரிக்கப்படும் ஒரு வகை பட்டுப் புடவை ஆகும். இந்தப் புடவைகள் திருமண பெண்களுக்காக வடிவமைக்கப்படும் ஒரு நேர்த்தியான அழகைக் கொண்ட புடவையாகும். இந்த புடவையை அணியும் பெண்கள் தங்கள் மனதளவில் மகிழ்ச்சியை உணர்வார்கள். இந்தியாவில் கிடைக்கும் பல பரந்த அளவிலான பட்டுப் புடவைகளில் காஞ்சிபுரம் சேலை சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. காஞ்சிபுரம் புடவையின் வலிமையும் மகத்துவமும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. தூய மல்பெரி பட்டில் இருந்து நெய்யப்பட்ட காஞ்சிபுரம் சேலைகள் எண்ணற்ற வண்ணங்களில் உருவாக்கப்படுகிறது.
மேலும் படிக்க: பாரம்பரிய சாந்தேரி பட்டு புடவைகளின் லேட்டஸ்ட் டிசைன்கள்
காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளில் பார்டர்கள் பல மாறுபட்ட நிறத்தில் தங்க நெசவு சேர்க்கப்படுகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் புடவைகள் பாரம்பரியமாக எளிய தங்கக் கோடுகள் அல்லது தங்கப் புள்ளிகளைக் குறிக்கும் வடிவமைப்புகளைக் கொண்டிருந்தன. இந்தப் புடவைகளின் வடிவமைப்புகள் தென்னிந்தியக் கோயில்களில் உள்ள வடிவமைப்புகள், பறவைகள், இலைகள் போன்ற இயற்கை கூறுகள் வைத்து உருவாக்கப்படுகிறது. காஞ்சிபுரம் புடவை பார்டர்களில் உள்ள சில சிறந்த வடிவங்கள் ருத்ராட்ச மணிகள், கோபுரம், மயில்கண் மற்றும் குயில்கண் போன்றவை புகழ் பெற்ற வடிவமாகும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற காஞ்சிபுரம் டிசைனர் பட்டுப் புடவைகள் செய்யப்படுகின்றன, பாரம்பரிய பட்டுப் புடவையில் எம்பிராய்டரி அல்லது கிரிஸ்டல் வேலைகள் செய்யப்படுகின்றன. இது போன்ற சில வடிவமைப்பை கொண்ட திருமணக் காஞ்சி பட்டு புடவைகளை பார்க்கலாம்.
மணப்பெண்களுக்கான காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள்
பாரம்பரியம் மாறாமல் தங்க ஜரிகைகள் வைத்து தென்னிந்திய கோவிகள், சிற்பங்கள், மற்றும் ஓவியங்களை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் காஞ்சிவர திருமண பட்டுப் புடவைகளைச் சிலவற்றைப் பார்க்கலாம்.
மெஜந்தா காஞ்சிபுரம் பட்டுப் புடவை
மெஜந்தா நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அசல் காஞ்சிபுரம் தூய பட்டு, சுத்தமான தங்க ஜரியில் கையால் நெய்யப்பட்ட சேலையாகும். புடவை முழுவதும் தங்க ஜாரி கொண்டு மலர் வடிவங்களுடன் உடல் முழுவதும் மெஜந்தா நிறத்தில் உள்ளன. இந்த புடவையின் ஜரி பார்டர்களில் அன்னபக்ஷி உருவங்கள் உள்ளன. பல்லுவில் பெரிய யாழி மற்றும் மயில் உருவங்கள் மூலம் மேலும் அழகு சேர்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புடவை திருமணப் பெண்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
Image Credit:pinterest
திருமண பெண்களுக்கான சிவப்பு காஞ்சிபுரம் பட்டு புடவை
சிவப்பு அசல் காஞ்சிபுரம் பட்டு மற்றும் சுத்தமான ஜரியை கொண்டு கைகளால் நெய்யப்பட்டது. புடவையின் உடல் சிவப்பு நிறத்தில் தங்க ஜாரியில் மலர் வடிவங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ரெட்டைப் பெட்டு எல்லையில் தங்க ஜரியில் மயில் மற்றும் யானை உருவங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்லுவில் குதிரை பெட்டு மற்றும் தங்க ஜாரியில் பனாரசி வடிவங்கள் கொண்டு திருமண பெண்களுக்காகவே செய்யப்பட்டது.
Image Credit:pinterest
பச்சை மற்றும் மெரூன் காஞ்சிபுரம் பட்டுப் புடவை
பச்சை மற்றும் மெரூன் நிறத்தில் சுத்தமான கஞ்சிப்பட்டு. இந்த சுத்தமான ஜரி கையால் நெய்யப்பட்டது. புடவையின் உடல் முழுவதும் பச்சை நிறத்தில் கோர்வை மெரூன் பார்டர் மற்றும் பழங்கால தங்க ஜாரியில் மலர் வடிவங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்லு பழங்கால தங்க ஜாரியில் மலர் வடிவங்களைக் கொண்டுள்ளது.
Image Credit:pinterest
மஞ்சள் மற்றும் ஊதா காஞ்சிபுரம் பட்டு புடவை
மஞ்சள் மற்றும் ஊதா நிறத்தில் தூய ஜரிகை வைத்து பட்டு புடவை நெய்யப்பட்டுள்ளது. உடல் மஞ்சள் நிறத்தில் தங்க ஜாரியில் மலர் வடிவங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஊதா நிற எல்லையில் மயில், மலர் மற்றும் மயில்கண்ணின் பெட்டுகள் தங்க ஜரியில் நேர்த்தியாகத் திருமண பெண்களுக்கு ஏற்ற விதமாக இருக்கிறது. இந்த புடவை மங்களகரமாகத் தோற்றத்தைக் கொடுக்கும் விதமாக இருக்கும்.
Image Credit:pinterest
பீச் நிற காஞ்சி பட்டுப் புடவை
இந்த பீச் மற்றும் ஊதா நிற காஞ்சிபுர பட்டு சேலை தூய பட்டு மற்றும் சுத்தமான ஜரி கொண்டு நெய்யப்பட்டது. உடல் முழுவதும் பீச் நிறத்தில் தங்க ஜாரி ஜாகார்டு வடிவத்துடன் இருக்கும். சில காலங்களாக திருமணப்பெண்களுக்கு இந்த பீச் நிறம் வெகுவாக கவர்ந்துள்ளது. அதே நிறத்தில் பழமை மாற வடிவில் ஊதா நிறக் கரையில் மயில், கமலம் மற்றும் பனாரசி வடிவங்கள் தங்க ஜரியில் உள்ளன. இந்த புடவை கண்டிப்பாகத் திருமண பெண்களுக்குச் சிறந்த தேர்வாக இருக்கும்.
Image Credit:pinterest
மேலும் படிக்க: காலத்தால் அழியாத பெண்களை கவர்ந்து இழுக்கக்கூடிய குந்தன் ஜூவல்லரி டிசைன்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation