உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான வாரணாசியில் பனாரசி பட்டுப் புடவைகள் நெய்யப்படுகின்றன. இந்தப் புடவையின் நேர்த்தியான பட்டுத் துணி, சிக்கலான ஜரி வேலைப்பாடு மற்றும் வடிவங்களுக்காக அறியப்படுகின்றன. முகலாயர் காலத்திலிருந்து இந்த பனாரசி புடவைகள் இந்தியப் பெண்களுக்குப் பெருமை சேர்க்கிறது. தூய பட்டு பனாரசி புடவைகள் உயர்தர பட்டு நூல்கள் மற்றும் முகலாய உருவங்கள், மலர் வடிவங்கள் மற்றும் சிக்கலான ஜரி வேலைகளை கைகளால் உருவாக்கப்படுகிறது. பனாரஸ் பட்டுப் புடவையின் தனிச்சிறப்பு ஆடம்பரமான அமைப்பு மற்றும் நுட்பமான கைவினை வேலைப்பாடுகள். பனாரசி பட்டுப் புடவையின் புகழ் தெரிந்து சந்தையில் கள்ள தயாரிப்புகளால் நிரம்பி வழிகிறது, உண்மையான பனாரசி பட்டுப் புடவையை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க: மணப்பெண்களுக்கான 5 அசத்தலான காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள்
உண்மையான பனாரசி பட்டுப் புடவைகளைக் கண்டறிய வழிகள்
தூய பட்டுவை அடையாளம் காண வேண்டும்
உண்மையான பனாரசி பட்டுப் புடவைகள் தூய பட்டிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. துணி மென்மையாகவும், வழுவழுப்பு தன்மையாகவும், தொடுவதற்கு ஆடம்பரமாகவும் உணர வைக்கும். உண்மையான பட்டு ஒரு இயற்கையான பளபளப்பைத் தருகிறது.
Image Credit:pinterest
சிக்கலான ஜரி வேலைப்படை சரிபார்க்கவும்
பனாரசி பட்டுப் புடவைகளின் தனித்துவமான அம்சம் என்றால் சிக்கலான ஜரி வேலைப்பாடு. பட்டு புடவைகளில் பயன்படுத்தப்படும் ஜரி அல்லது உலோக நூல்கள் பொதுவாக தூய தங்கம் அல்லது வெள்ளி அல்லது இரண்டும் கலந்தவையாக உருவாக்கப்படுகிறது. இந்த ஜரி வேலைப்பாடு பெரும்பாலும் பூக்கள், இலைகள் மற்றும் பாரம்பரிய வடிவங்கள் போன்ற மையக்கருத்துக்களைக் கொண்டு அமைக்கப்படும். ஜரி வேலையில் இருக்கும் நம்பகத்தன்மையை உணர உங்கள் விரல்களை மெதுவாக மேல் தேட்டு இயக்கி பார்க்கவும்.
விரிவான நெசவைப் பார்க்க வேண்டும்
உண்மையான பனாரஸ் பட்டுப் புடவையின் கைத்தறி நுட்பங்களைப் பயன்படுத்தி நெசவப்படுகிறது. வடிவமைப்புகள் பொதுவாக எம்ப்ராய்டரி அல்லது அச்சிடப்படுவதை விட நேரடியாக துணியில் நெய்யப்பட்டு இருக்கிறத என்பதை காண வேண்டும். புடவையின் பின்புறம் டிசைன் தெரிகிறதா என்பதைப் பார்க்கவும். அது அச்சிடப்பட்டதை விட நெய்யப்பட்டு இருக்க வேண்டும். புடவையின் பின்புறமும், முன் பகுதியிலும் ஒரு நேர்த்தியான கைத்தறி நெசவு தெரியும்.
விலைகளைக் கவனிக்க வேண்டும்
பனாரஸ் பட்டுப் புடவைகளின் தரம் மற்றும் கைவினைத்திறன் காரணமாக பொதுவாக விலை அதிகமாக இருக்கும். சந்தையில் மலிவு விலையிலிருந்தால் கண்டிப்பாக நன்ப வேண்டாம்.
Image Credit:pinterest
சில்க் மார்க் சான்றிதழ்
உண்மையான பனாரசி பட்டுப் புடவைகள் சில்க் மார்க் சான்றிதழ் இருக்கிறதா என்று பார்க்கலாம். இதில் பட்டு வகை மற்றும் உற்பத்தி செய்யும் இடத்தைக் குறிக்கும் அட்டைகள் இருக்கும். அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் சான்றிதழ்கள் புடவையின் நம்பகத்தன்மையைத் தருகிறது.
மேலும் படிக்க: பாரம்பரிய சாந்தேரி பட்டு புடவைகளின் லேட்டஸ்ட் டிசைன்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation