சட்டையில் படிந்த வியர்வை கறையை அகற்ற இந்த ஒற்றை பொருள் பயன்படுத்துங்க

உடலில் சுரக்கும் வியர்வை நாம் அணிந்திருக்கும் ஆடையில் ஊறிஞ்சப்பட்டு வியர்வை கறையாக மாறுகிறது. பார்ப்பதற்கு சட்டையில் உப்பு கொட்டியது போல் இருக்கும். சட்டையில் படிந்த வியர்வை கறையை அகற்றுவது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
image

கோடை கால வெயிலால் நம்முடைய உடல் அதிகளவு வியர்வையை வெளியேற்றுவது இயல்பே. கை குட்டையை கொண்டு முகத்திலும், கைகளிலும் வியர்வை தொட்டு துடைத்து எடுப்போம். எனினும் சட்டையின் காலர், அக்குள் பகுதிகளில் வியர்வை படிந்து உப்பு கறை போல் தெரியும். குறிப்பாக ஆண்களுக்கு கழுத்து காலர், முதுகு, தோள்பட்டை பகுதிகளில் சட்டையில் வெள்ளையாக இருக்கும். சில நேரங்களில் இந்த கறை ஊறவைத்து துவைத்தாலும் எளிதில் போகாது. பிடித்தமான சட்டை அல்லது ஆடையில் வியர்வை கறை படிந்திருந்தால் அணிவதற்கு சங்கட்டமாக இருக்கும். வெயில் காலத்தில் உடலில் கண்டிப்பாக வியர்வை வெளியேறும். அதை கட்டுப்படுத்தவும் முடியாது. அதற்காக பிடித்தமான சட்டை அல்லது ஆடையை வெளியே அணிந்து செல்லாமல் இருக்க முடியுமா ? இந்த பதிவை முழுமையாக படித்த பிறகு அந்த கவலை உங்களுக்கு இருக்காது. சமையல் அறையில் உள்ள முக்கிய பொருள் கொண்டு சட்டையில் படிந்த வியர்வை கறையை எளிதில் அகற்ற முடியும். பல விஷயங்களுக்கு பயன்படும் பேக்கிங் சோடாவே அந்த பொருள். துணியில் படிந்திருக்கும் எந்த எண்ணெய், அழுக்கு, வியர்வை கறையையும் அகற்றிட பேக்கிங் சோடா நிச்சயம் உதவும். பேக்கிங் சோடா பயன்படுத்தி சட்டையின் காலர், கை மடிக்கும் பகுதி, அக்குள் பகுதிகளில் படிந்த வியர்வை கறை அகற்றுவது எப்படி என பார்க்கலாம்.

get stains out of shirts

வியர்வை கறை அகற்றிட பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா ஆல்கலைன் தன்மை கொண்டது. இது வியர்வையில் உள்ள உப்பு மற்றும் திரவத்தை உடைக்கிறது. முதலில் அழுக்கை நீக்கி பிறகு கெட்ட வாசனையையும் விரட்டுகிறது. டிவி விளம்பரங்களில் வருவது போல் அதிக தொகை கொடுத்து வாசனை திரவம் வாங்கி துணியை துவைக்க தேவையில்லை. பேக்கிங் சோடா கொண்டும் வியர்வை, அழுக்கு கறைகளை அகற்றிடலாம்.

2 டீஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளவும். கொஞ்சமாக தண்ணீர் சேருங்கள். அதோடு கொஞ்சமாக துணி சோப்பு தூள் அல்லது திரவம் தேவைப்படும். அனைத்தையும் நன்கு கலந்து வீட்டில் உள்ள பழைய பல் துலக்கியில் தொட்டு எடுத்து அழுக்கு, வியர்வை கறை உள்ள இடத்தில் தேய்க்கவும். மென்மையாக தேய்த்தால் போதுமானது. மிகவும் அழுத்தி தேய்த்தால் துணியின் தன்மை போய்விடும்.

பேக்கிங் சோடா கலவை தேய்த்த பிறகு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்கு ஊறவிடுங்கள். இப்போது துணியை சாதாரண தண்ணீரில் அலசவும். அதன் பிறகு வழக்கம் போல் வாஷிங் மெஷினில் போட்டு எடுத்தால் நிச்சயமாக வியர்வை கறை இருக்காது.

மேலும் படிங்கசீப்பு இடுக்கில் தேங்கி உள்ள அழுக்கை 5 ரூபாயில் சுத்தம் செய்திடலாம்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஹிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP