
மழைக்காலம் என்பது குளுமையான சூழலையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். ஆனால், அதே சமயம் கொசுக்களின் தொந்தரவுகளும் அதிகமாக இருக்கும். குறிப்பாக, டெங்கு போன்ற கடுமையான நோய்களை பரப்பும் ஆபத்தை இவை கொண்டுள்ளன.
மேலும் படிக்க: உங்கள் வீட்டு சமையலறையில் கரப்பான் பூச்சிகள் தொல்லையா? இதை செய்தால் ஓடிவிடும்!
அதன்படி, இரசாயனங்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்தாமல், இந்த மழைக்காலத்தில் உங்கள் வீட்டை கொசுக்கள் இல்லாத பாதுகாப்பான இடமாக மாற்ற சில எளிய இயற்கை வழிமுறைகளை காணலாம்.
கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய தேவையானது மிகக் குறைந்த அளவிலான தேங்கிய நீர் மட்டுமே. உங்கள் வீட்டை சுற்றியுள்ள தொட்டிகள், பழைய டயர்கள், செடிகளுக்கு அடியில் உள்ள தட்டுகள், அடைபட்ட வடிகால்கள் போன்ற இடங்களில் தேங்கி கிடக்கும் நீரை உடனடியாக சுத்தம் செய்யுங்கள். இது கொசுக்களை கட்டுப்படுத்தும் மிக முக்கியமான வழியாகும்.

கொசுக்களை வீட்டிற்கு உள்ளே நுழைய விடாமல் தடுப்பதற்கு, ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் நுண்ணிய வலைகளை பொருத்துவது ஒரு சிறந்த தடுப்பு முறையாகும். மேலும், இரவில் உறங்கும் போது கட்டிலில் கொசு வலைகளை பயன்படுத்துவது நல்ல பலன் அளிக்கும். இதன் மூலம் கொசுக்கடியை நம்மால் தடுக்க முடியும்.
மேலும் படிக்க: உங்கள் வீட்டில் எலி தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த 5 டிப்ஸை பின்பற்றவும்
இயற்கையான வழியில் பாரம்பரிய முறையில் சில கொசு விரட்டிகளை நாம் பயன்படுத்தலாம். இதற்காக, சிறிது கற்பூரத்தை ஏற்றி வைத்தால், அதிலிருந்து வரும் அடர்த்தியான புகை கொசுக்களை விரட்டிவிடும். பூண்டை கொதிக்க வைத்து, அந்த நீரை அறைகளில் தெளிக்கலாம். இதன் வாசனைக்கு கொசுக்கள் வருவது கட்டுப்படுத்தப்படும். எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கிராம்புகளை குத்தி அறைகளில் வைத்தால், அதன் வலுவான நறுமணம் கொசுக்களை நெருங்க விடாது.
இவை தவிர, வேப்ப எண்ணெய், டீ ட்ரீ ஆயில், லாவெண்டர், புதினா, சிட்ரோனெல்லா மற்றும் லெமன் யூகலிப்டஸ் எண்ணெய்கள் ஆகியவை கொசுக்களை விரட்டும் இயற்கை வழிகளில் மிகவும் பயனுள்ளவை ஆகும். இவற்றை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சிறிதளவு சருமத்தில் தடவலாம். இல்லையென்றால், இவற்றை தண்ணீரில் கலந்து அறைகளில் தெளிக்கலாம்.

சில தாவரங்கள் கொசுக்களை விரட்டும் ஆற்றலையும் கொண்டுள்ளன. துளசி, லெமன்கிராஸ், புதினா போன்ற செடிகளை ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு அருகில் வைப்பது கொசுக்களை உள்ளே வர விடாமல் தடுக்கும்.
கொசுக்கள் வலிமையான பறக்கும் பூச்சிகள் அல்ல. எனவே, வீட்டில் நல்ல காற்றோட்டத்தை உருவாக்குவது அவற்றை தடுக்க உதவும். போதுமான காற்றோட்டம் இல்லாத இடங்களில் அவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இவற்றை பின்பற்றுவதன் மூலம் இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]