தங்கம் - பெண்கள் விரும்பி அணியும் ஆபரணங்களில் முக்கியமானது. அணியுடம் ஆடையை கூட 2-3 மணி நேரத்தில் வாங்கிவிடுவார்கள். குருவி சேகரிப்பது போல் காசு சேர்த்து வாங்கும் நகை எடுப்பதற்கு பல மணி நேரம் ஆகும். சில சமயங்களில் குறிப்பிட்ட நகை டிசைனுக்காக 4-5 கடைகள் ஏறி இறங்குவதும் உண்டு. தங்க நகைகளை வாங்குவதில் உள்ள ஆர்வம் அதை பராமரிப்பதும் இருக்க வேண்டும். தங்க நகைகளை நீண்ட நாட்களாக பயன்படுத்தும் போது அழுக்கு படிந்து, கறுத்து போக வாய்ப்பு இருக்கிறது. நகை ஆசாரியிடம் எடுத்துச் சென்றால் அவர் அரை கிராம் தங்கத்தின் விலையை பாலிஷ் செய்வதற்கு கேட்பார். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள விஷயத்தை பின்பற்றினால் வீட்டிலேயே நகையை பாலிஷ் செய்து பளபளப்பாக்கலாம்.
நகைகளை பாலிஷ் செய்யும் முறை
பீரோவில் நகைகளை பூட்டி வைத்து சுப நிகழ்வுகளுக்காக அணியும் போது நகைகளில் அழுக்கு படியும் வாய்ப்பு குறைவே. எப்போது அணிந்திருக்கும் தாலி, வளையல், கம்மல் ஆகியவற்றில் அழுக்கு சேர்ந்து கறுமையாக வாய்ப்பு அதிகம். நம் அம்மா பாத்திரங்களை கழுவும் போது வளையல் கழட்டி வைப்பதை பார்த்திருப்போம். அழுக்கு படியும் என்பதை அறிந்திருப்பார்.
நகை பாலிஷ் செய்வதற்கு
தண்ணீர், மஞ்சள் தூள், சோப்பு தூள் எடுத்துக்கொள்ளுங்கள். சுத்தமான தண்ணீரில் நகைகளை வைத்து 2 நிமிடங்களுக்கு சூடுபடுத்தவும். அப்போது ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சோப்பு தூள் போட்டு கலந்துவிடவும். தண்ணீர் சூடானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி நகைகளை எடுத்து நல்ல தண்ணீரில் மாற்றவும். இப்போது டூத் பிரெஷ் கொண்டு உள் பக்கமும், வெளி பக்கமும் தேய்க்கவும். இதன் பிறகு துணியில் உலர்த்தி துடைத்து பாருங்கள். புதிதாக வாங்கியது போல தங்க நகைகள் மினுக்கும்.
ஒரு பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சோப்பு தூள் அல்லது வாஷிங் திரவம் போட்டு கலக்கவும். இதில் நகைகளை போட்டு 15-20 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள். இப்போது பிரெஷ் வைத்து தேய்த்து குளிர்ந்த நீரில் கழுவவும். கம்மலை பளிச்சிட செய்ய ஷாம்பு போட்டு 2 நிமிடங்களுக்கு ஊறவிட்டு கழுவுங்கள்.
குறிப்பு : கல் பதித்த நகைகளை இந்த முறைகளில் பாலிஷ் செய்யாதீர்கள்.
குளோரின் அதிகம் உள்ள நீரில் நகைகளை கழுவக் கூடாது.
பாட்டி காலத்து சுருக்கு பை அல்லது பிளாஸ்டிக் பையில் நகைகளை வைக்கவும்.
லோஷன், வாசனை திரவம் ஆகியவை தங்க நகைகளை சேதப்படுத்தும்.
நகை சேதம் அடைந்திருந்தால் அதை நீங்களாக பாலிஷ் செய்ய முயற்சிக்காதீர்கள்.
மேலும் படிங்ககுக்கரில் அடிக்கடி நீர் கசியுதா ? இந்த குறிப்புகளை பின்பற்றினால் தவிர்க்கலாம்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation