
Today Gold Price: இன்றைய தினம் தங்கம் விலை மீண்டும் அதிகரித்துக் காணப்படுகிறது. பல நாட்களுக்கு பிறகு நேற்று தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்ததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால், சாமானிய மக்கள் தங்க நகை வாங்குவதற்கு சிரமம் அடைகின்றனர்.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சமீப நாட்களாக அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக தங்கத்தை நகையாக வாங்க வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள் தயக்கம் காண்பிக்கின்றனர். மேலும், தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று கருதுபவர்களுக்கும், அதிகரிக்கும் தங்கம் விலை சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில், ஆபரண தங்கத்தின் விலை இன்று ரூ. 50 உயர்ந்துள்ளது.
இன்று 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 55 அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 13,473 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 13,528 என விற்பனை ஆகிறது. மேலும், 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,08,224 எனவும், 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,35,280 எனவும், 100 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 13,52,800 எனவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: இனி வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போட கடைக்கு செல்ல வேண்டாம்; வீட்டிலேயே நகையை சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ரூ. 50 உயர்ந்துள்ளது. அந்த வகையில், நேற்று ரூ. 12,350 என விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் 22 கேரட் தங்கம், இன்று ரூ. 12,400 என விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 99,200 எனவும், 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,24,000 எனவும், 100 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 12,40,000 எனவும் விற்பனை ஆகிறது.

18 கேரட் தங்கத்தின் விலையும் இன்றைய தினம் ரூ. 50 அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 10,300 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 10,350 என விற்பனை ஆகிறது. இது மட்டுமின்றி, 8 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 82,800 எனவும், 10 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,03,500 எனவும், 100 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 10,35,000 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: தங்கத்தில் இவ்வாறு முதலீடு செய்வதால் இவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறதா!
தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, நேற்றைய தினத்தை விட இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 11 அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 222 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது சாமானிய மற்றும் நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]