
Today Gold Price: தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நேற்று இருந்ததை விட இன்று குறைவாக காணப்படுகிறது. இதன் காரணமாக தங்க நகை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் இன்று வாங்க முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் என்பது ஒரு காலம் வரை ஆடம்பர நகையாக காணப்பட்டது. ஆனால், தற்போது அதன் பொருளாதார முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள், தங்கத்தை முதலீடாகவும், சேமிப்பாகவும் கருதுகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது. இதனால், நகை வாங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்ட சாமானிய மக்கள் கவலை அடைந்தனர். இந்த சூழலில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை, 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 65 குறைந்துள்ளது. இதன் மூலம் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 13,571 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ. 13,506 என விற்பனை ஆகிறது. மேலும், 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,08,048 எனவும், 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,35,060 எனவும், 100 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 13,50,600 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: இனி வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போட கடைக்கு செல்ல வேண்டாம்; வீட்டிலேயே நகையை சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்
22 கேரட் தங்கத்தின் விலை நேற்று ரூ. 12,440 என விற்பனையான நிலையில் இன்று ரூ. 60 குறைந்திருக்கிறது. இதன் மூலம், இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 12,380 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 8 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 99,040 எனவும், 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,23,800 எனவும், 100 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 12,38,000 எனவும் விற்பனை ஆகிறது.

18 கேரட் தங்கத்தின் விலையும் இன்று ரூ. 50 குறைவாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் நேற்று ரூ. 10,380 என விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் 18 கேரட் தங்கம் இன்று ரூ. 10,330 என விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, 8 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 82,640 எனவும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 1,03,300 எனவும், 100 கிராம் 18 கேரட் தங்கம் விலை ரூ. 10,33,000 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தங்கத்தில் இவ்வாறு முதலீடு செய்வதால் இவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறதா!
தங்கம் விலை மட்டுமின்றி தொடர்ச்சியாக அதிகரித்துக் காணப்பட்ட வெள்ளி விலையும் என்று சற்று குறைந்துள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று வெள்ளி விலை ரூ. 3 குறைந்திருக்கிறது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 221 என விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும், இன்று சற்று சரிவை சந்தித்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்திருக்கின்றனர்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]