herzindagi
image

இனி வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போட கடைக்கு செல்ல வேண்டாம்; வீட்டிலேயே நகையை சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்

உங்களிடம் இருக்கும் வெள்ளி நகைகள் பார்ப்பதற்கு பழைய நகைகள் போன்று காட்சி அளிக்கிறதா? கவலையே வேண்டாம், வீட்டிலேயே வெள்ளி நகைகளை எவ்வாறு சிம்பிளாக சுத்தம் செய்யலாம் என்று இந்தப் பதிவில் விரிவாக காணலாம்.
Editorial
Updated:- 2025-08-22, 12:41 IST

நம்மிடம் இருக்கும் வெள்ளி நகைகளை சுத்தம் செய்வதற்கு பெரும்பாலும் கடைகளுக்கு தான் கொண்டு செல்வோம். ஆனால், வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எப்படி நகையை சுத்தம் செய்யலாம் என்று பார்ப்போம்.

மேலும் படிக்க: இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க... உங்க வீட்டு ரோஜா செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கும்!

 

வெள்ளி நகைகள் வாங்கும் போது பளபளப்பாக காட்சி அளிக்கும். ஆனால், அவற்றை பயன்படுத்த தொடங்கிய சில நாட்களிலேயே அந்த பளபளப்பை வெள்ளி நகைகள் இழந்து விடுகின்றன. வியர்வை, நாம் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் ஈரப்பதம் போன்ற பல்வேறு காரணங்களால் வெள்ளி நகைகள் பார்ப்பதற்கு மங்கலாக காட்சி அளிக்கக் கூடும்.

 

அதற்காக, அடிக்கடி வெள்ளி நகைகளை மாற்றிக் கொண்டே இருப்பதும் சாத்தியமற்றது. இதனை மீண்டும் புதிது போன்று மாற்றுவதற்கு கடைகளில் கொடுத்து பாலிஷ் செய்யும் வழக்கத்தை சிலர் கடைபிடிப்பார்கள். எனினும், வீட்டில் இருக்கும் சில எளிமையான பொருட்கள் மூலமாக வெள்ளி நகைகளை எவ்வாறு மீண்டும் புதிது போன்று மாற்றலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Silver

 

தேவையான பொருட்கள்:

 

பேக்கிங் சோடா,

 

வினிகர் அல்லது எலுமிச்சை சாறு,

 

துணி,

 

பல் துலக்க பயன்படும் பிரஷ்,

 

சுடுதண்ணீர்,

 

அலுமினியம் ஃபாயில் பேப்பர் (Aluminium Foil) மற்றும்

 

ஒரு பாத்திரம்.

மேலும் படிக்க: ஸ்டார் ஹோட்டல் போன்று வீடு முழுவதும் மனம் வீச வேண்டுமா? இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

 

சுத்தம் செய்யும் முறை:

 

ஒரு பாத்திரத்தின் உட்புறத்தில் அலுமினியம் ஃபாயிலின் பளபளப்பான பக்கம் மேல் நோக்கி இருக்கும்படி விரிக்கவும். இது வெள்ளி நகைகளின் கறையை நீக்கும் வகையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு சேர்க்கவும். இப்போது, பாத்திரம் பாதி அளவு நிரம்பும் வரை சுடுதண்ணீரை ஊற்றவும்.

 

இப்போது, சுத்தம் செய்ய வேண்டிய வெள்ளி நகையை அந்த பாத்திரத்தில் இருக்கும் சுடுதண்ணீரில் அப்படியே வைக்க வேண்டும். குறிப்பாக, இந்த நகை அலுமினியம் ஃபாயிலை தொடும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வெள்ளி நகையை சுமார் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.

Ornament

 

இதையடுத்து, சிறிதளவிற்கு வினிகர் அல்லது எலுமிச்சை சாறை இதில் சேர்க்கவும். இப்படி செய்யும் போது பாத்திரத்தில் உள்ள சுடுதண்ணீர் நுரைத்து வரும். இதற்கடுத்து, ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் மேலும் கொஞ்சம் சுடுதண்ணீரை இதில் ஊற்றலாம். இதன் பின்பு, பல் துலக்க பயன்படும் பிரஷ் கொண்டு நகையின் இடுக்குகளில் மெதுவாக தேய்க்க வேண்டும். நன்கு அழுக்கு நீங்கும் வரை தேய்க்கலாம்.

 

இறுதியாக, சுத்தம் செய்த நகையை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கலாம். இவ்வாறு செய்தால் வெள்ளி நகை முற்றிலும் சுத்தமாகி விடும். இனி மிருதுவான துணி கொண்டு நகையை துடைக்க வேண்டும். அதில் கீறல்கள் விழாத அளவிற்கு கவனமாக துடைப்பது அவசியம். உங்களது நகைக்கு கூடுதல் பளபளப்பு தேவைப்பட்டால், வெள்ளி நகைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் துணியை (silver polishing cloth) கொண்டு மெதுவாக துடைக்கலாம்.

 

இப்படி சுத்தம் செய்த வெள்ளி நகைகளை பத்திரமாக வைப்பதற்கும் சில வழிமுறைகள் இருக்கிறது. நகையை பயன்படுத்தாத நேரத்தில் ஒரு துணியில் சுற்றி, அதனை நகைப் பெட்டியில் பூட்டி வைத்திருக்க வேண்டும். இப்படி செய்தால் நகை பார்ப்பதற்கு புதிது போன்று இருக்கும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]