herzindagi
image

குக்கரில் அடிக்கடி நீர் கசியுதா ? இந்த குறிப்புகளை பின்பற்றினால் தவிர்க்கலாம்

சமைக்கும் பெண்களுக்கு அடுப்படியில் கவலை அளிக்கும் விஷயங்களில் குக்கரின் நீர் கசிவும் ஒன்று. சரியான அளவில் தண்ணீர் ஊற்றினாலும் திடீரென குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறும். இந்த கட்டுரையில் பகிரப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றினால் நீர் கசிவை தடுக்கலாம்.
Editorial
Updated:- 2024-12-25, 12:47 IST

விறகு அடுப்பில் இருந்து கேஸ் அடுப்பிற்கு மாறிய காலத்தில் இருந்தே பெரும்பாலானோர் சமைப்பதற்கு குக்கர் பயன்படுத்தி வருகிறோம். சமையலறையில் சாதம், பருப்பு வேக வைக்க ப்ரஷர் குக்கர் பயன்படுத்தப்படுகிறது. குக்கரை கவனமாக கையாள தெரிந்தால் மட்டுமே எந்த பாதிப்பும் நமக்கு ஏற்படாது. கைப்பிடியில் உள்ள வட்ட வடிவ ரப்பர் குக்கருக்குள் அழுத்தம், வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது. ரப்பரின் நெகிழ்வுத்தன்மை போய்விட்டால் குக்கரில் சமைப்பது கடினமாகி விடும். நீர் கசியும், விசில் சரியாக வராது. குக்கரில் இருந்து அதிகளவு நீர் கசிந்து அடுப்பில் பசை போல் ஒட்டிக்கொள்ளும். இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் குக்கரில் இருந்து நீர் கசியாது.

water leaking from pressure cooker

ரப்பரை சோதிக்கவும்

குக்கரின் கைப்பிடியில் உள்ள ரப்பரை அடிக்கடி சோதிக்கவும். அதன் நெகிழ்வுத்தன்மை போய்விட்டதென தெரிந்தால் உடனடியாக மாற்றவும். ஏனெனில் அது நீர் கசிவுக்கு வழிவகுக்கும். ரப்பரை அதிக நாட்களுக்கு பயன்படுத்த விரும்பினால் சமைத்த பிறகு அதனை குளிர்ந்த தண்ணீரில் போட்டுவிடுங்கள். அதே போல கழுவும் போது தேய்மானம் ஏற்படக் கூடாது.

குக்கரின் விசில்

குக்கரை மூடி விசில் மாட்டும் போது அதனுள் அழுக்கு, தூசி, உணவு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். விசிலில் அடைப்பு இருந்தால் நீராவி வெளியேறுவது தடுக்கப்படும். அழுத்தம் தாங்காமல் குக்கர் வெடிக்கவும் செய்யும். சமைக்கும் போதெல்லாம் குக்கரின் விசிலை நன்கு கழுவி பயன்படுத்தவும். சிறிய பிரஷ் வைத்து விசிலை சுத்தம் செய்யுங்கள். நீராவி வெளியேறுவதில் சிக்கல் இருந்தால் குக்கரை சரியாக மூடவில்லை அல்லது விசிலில் ஏதோ பிரச்னை என அர்த்தம்.

குக்கரில் எண்ணெய் பயன்பாடு

காய்கறி, பருப்பு, சாதம் வேகவைக்கும் போது சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது நீர் கசிவை தடுக்கும். குக்கரை மூடும் போது சுற்றி எண்ணெய் தடவுங்கள். இதனால் ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு சமைக்கும் போது நீர் வெளியேறாது.

குளிர்ந்த நீரில் கழுவுங்கள்

சமைக்கும் போது நீர் கசிவு ஏற்பட்டால் உடனடியாக அடுப்பை ஆஃப் செய்து மூடியை திறந்து அதை குளிர்ந்த நீரில் கழுவி திருப்பி மூடிவிட்டு சமையலை தொடருங்கள். இது கண்டிப்பாக பயனளிக்கும். நீர் கசிவு தவிர்க்கப்படும்.

மேலும் படிங்க வீட்டை சுத்தப்படுத்த பிரத்யேக தூசி நீக்கும் ஸ்ப்ரே! நீங்களே தயாரிக்கலாம்...

குக்கரில் தண்ணீர் அளவு

நீங்கள் பயன்படுத்தும் குக்கரின் அளவு 2 லிட்டர், 3 லிட்டர், 5 லிட்டர் என்றால் அதற்கு ஏற்ப சமைக்கவும். அதிகளவு தண்ணீர் ஊற்றி சமைத்தால் கட்டாயமாக தண்ணீர் வெளியேறும். மேலும் அதிகமான சூட்டில் சமைத்தாலும் தண்ணீர் வெளியேற வாய்ப்புண்டு. எனவே சமைக்கும் உணவுக்கு ஏற்ப தண்ணீர் பயன்படுத்தவும். மிதமான தீயில் சமையல் செய்வது நல்லது.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]