உருளைக்கிழங்கை காய்கறிகளின் அரசன் என்று குறிப்பிடுகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பமான காய்கறிகளில் உருளைக்கிழங்கும் நிச்சயமாக இடம் பெறும். உருளைக்கிழங்கு வறுவல் முதல் பிரெஞ்ச் ஃப்ரைஸ் வரை உருளைக்கிழங்கை கொண்ட தயாரிக்கப்படும் எல்லா ரெசிபிக்களுமே ஹிட் தான். சுவை நிறைந்த இந்த காய்கறிகளை ஒரு சிலர் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள தயங்குகிறார்கள்.
ஆனால் உருளைக்கிழங்கை அதிகம் எண்ணெய் சேர்க்காமல் சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால், எவ்வித தயக்கமும் இன்றி உருளைக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம். உருளைக்கிழங்கில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சத்துக்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: ரம்யா பாண்டியனின் அசர வைக்கும் கிரேன் போஸ், இந்த யோகாவில் அப்படி என்ன ஸ்பெஷல்?
உருளைக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த ஆதாரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் உருளைக்கிழங்கில் இதைத் தவிர ஏராளமான நற்பண்புகளும் நிறைந்துள்ளன. இதில் பொட்டாசியம், துத்தநாகம், சோடியம், கால்சியம் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. மேலும் இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் C ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
உருளைக்கிழங்கில் உள்ள மெக்னீசியம்,துத்தநாகம் போன்ற சத்துக்கள் வலுவான எலும்புகளை பெற உதவுகின்றன. இதனை சரியான முறையில் எடுத்துக் கொள்ளும் பொழுது மூட்டு வலி போன்ற உடல்நல பிரச்சனைகளையும் குறைக்கலாம். உருளைக்கிழங்கு சாப்பிடுவது எலும்பு மெலிதல் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சார்ந்த நோய்களின் அறிகுறிகளையும் குறைக்கிறது.
பெரும்பாலும் உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் உடம்பில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் இது கொலஸ்ட்ராலை அதிகரிக்காது. உருளைக்கிழங்கை சமைக்கும் பொழுதோ அல்லது பொறிக்கும் பொழுதோ அதிக எண்ணெய் பயன்படுத்துவதால் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பின் அளவுகள் அதிகரிக்கலாம். இதை தவிர்க்க உருளைக்கிழங்கை குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தி, சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.
இன்றைய சூழலில் பலரும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். உருளைக்கிழங்கை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதனுடன் உங்கள் உணவில் குறைந்த அளவு சோடியம் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இது இரத்த நாளங்களை விரிவு படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இது வயிறு சார்ந்த பிரச்சனைகளை சமாளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நல்ல செரிமானத்திற்கும், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவும்.
உருளைக்கிழங்கை அளவோடு எடுத்துக்கொண்டு மேற்கூறிய நன்மைகளை எல்லாம் பெறலாம். இதனுடன் மிக முக்கியமாக குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தி சரியான முறையில் சமைத்து சாப்பிடவும். போதுமான வரை உருளைக்கிழங்கை பொரித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: மன அழுத்தத்தை குறைக்க உதவும் அற்புத உணவுகள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]