herzindagi
nuts engry drink reciprs

உடலுக்கு ஆற்றல் தரும் பானங்கள்; சுலபமாக வீட்டிலேயே செய்யும் முறை!

<span style="text-align: justify;">தாமரை விதைகள் மற்றும் நட்ஸ்களில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும்&nbsp; உடலுக்குத் தேவையான ஆற்றலை எளிதில் பெற்றுக் கொள்ள உதவியாக இருக்கும்.</span>
Editorial
Updated:- 2024-03-13, 17:59 IST

உடல் ஆரோக்கியமுடனும், ஆற்றலுடனும் இருந்தால் மட்டுமே அன்றாட பணிகளை எவ்வித இடையூறும் இல்லாமல் மேற்கொள்ள முடியும். இந்த சூழலில் தான் மக்களை அதிகம் கவரும் வகையில் பல எனர்ஜி பானங்கள் சந்தைகளில் விற்பனையாகிறது. இவை உண்மையில் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் என்றால் நிச்சயம் சந்தேகம் தான். கண்டிப்பாக எந்தவொரு ஆற்றல் பானத்திலும் செயற்கையான இரசாயனப் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும். இதனால் நாளடைவில் பல விதமான பக்கவிளைவுகளையும் சந்திக்க நேரிடும். 

உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும் என்பதற்காக ஏதாவது ஒரு பானங்களைக் கொடுத்து விட்டு எதிர்காலத்தில் எவ்வித பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றால், வீட்டில் தயாரிக்கக்கூடிய எனர்ஜி பானங்களை நீங்கள் ட்ரை பண்ணலாம் . உலர் பழங்கள், பால் மற்றும் நட்ஸ் போன்றவற்றை வைத்து வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த பானங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் உங்களுக்கு வழங்கும். இதோ வீட்டிலேயே உடலுக்கு ஆற்றலை அளிக்கும் பானங்களை எளிமையான முறையில் எப்படி? செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

almond drink

மேலும் படிக்க: மாலை நேர சிற்றுண்டிக்கான வெள்ளரிக்காய் சான்ட்விச்!

உடலுக்கு ஆற்றலைத் தரும் பானங்கள்:

தேவையான பொருட்கள்

  • தாமரை விதைகள் - 50 கிராம்
  • உலர் பேரிட்சை - 3
  • பாதாம் - 25 கிராம்
  • எள்  - சிறிதளவு
  • ஆளி விதைகள் - சிறிதளவு
  • சுக்கு - சிறிதளவு
  • பால்  - 2 கப்

செய்முறை:

  • உலர் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஹெல்த்தி பானங்கள் செய்வதற்கு முதலில் தாமரை விதைகளை கடாயில் போட்டு நன்கு வறுத்துக் கொண்டு தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
  • பின்னர் பாதாம், உலர் பேரிட்சை, எள், ஆளி விதைகள் மற்றும் சுக்கு போன்றவற்றை பொன்னிறமாக வரும் வரை வதக்கிக்கொள்ளவும்.
  • இதையடுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு வறுத்து வைத்துள்ள பொருள்களையெல்லாம் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இப்போது ஹெல்த்தி பானங்களுக்கானப் பவுடர் தயார்.
  • பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில்  பாலை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். இதில் அரைத்து வைத்துள்ள பவுடரைச் சேர்த்து கலந்தால் போதும். உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ஹெல்த்தி பானங்கள் ரெடி.

மேலும் படிக்க: ஆரோக்கியமான சுவையான பால் அல்வா செய்வது எப்படி?

ஹெல்த்தி பானங்களின் நன்மைகள்:  

lotus seeds drink

மேற்கூறியுள்ள முறைகளில் வீடுகளிலேயே சுலபமாக நீங்கள் உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய பானங்களை செய்யலாம். குறிப்பாக தாமரை விதைகளில் புரோட்டீன் சத்துக்களும், பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் ஒரே சேர கிடைப்பதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை எளிதில் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்கவில்லையென்றாலும், செரிமான சக்திக்கு ஏற்றவாறு தினமும் கொஞ்சம் பாலில் கலந்துக் கொடுப்பது நல்லது.

Image Source- Google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]