herzindagi
tips to make cucumber sandwich recipe making

Cucumber Sandwich Recipe: மாலை நேர சிற்றுண்டிக்கான வெள்ளரிக்காய் சான்ட்விச்!

<span style="text-align: justify;">ஈஸியாக 10 நிமிடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வெள்ளரிக்காய் சான்ட்விச் செய்முறை இது தான்!</span>
Editorial
Updated:- 2024-03-12, 23:45 IST

கோடை விடுமுறை வரப்போகுது. நாள் முழுவதும் உங்களது குழந்தைகள் உங்களுடன் மட்டுமே இருக்கப்போகிறது அல்லவா? இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்நாக்ஸ்களை செய்துக் கொடுக்கவிட்டால் நிச்சயம் வீட்டில் உள்ள அம்மாக்களைத் தொந்தரவு செய்வார்கள். இதையடுத்து வீடுகளில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களும் முறுக்கு, வடை, பணியாரம் போன்ற ஸ்நாக்ஸ்களை செய்துக் கொடுப்பார்கள். 

இவ்வாறு வழக்கம் போல ஒரே ஸ்நாக்ஸ்களை செய்துக் கொடுக்கும் போது குழந்தைகள் சளிப்பாகிவிடுவார்கள். ஏன் அம்மா? இப்படி பண்ற என திட்டிதீர்த்து விடுவார்கள். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அம்மாக்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் இந்த கோடைக்காலத்தில் உங்களது உடலுக்கு அதிகளவு நீர்ச்சத்துக்களைத் தரக்கூடிய வெள்ளரிக்காயை வைத்து வெள்ளரிக்காய் சான்ட்விச் ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். சான்ட்விச் என்றவுடன் ஏதோ புதிய ரெசிபி என்று நினைக்க வேண்டாம்? உங்களது வீடுகளிலேயே மிகவும் ஈஸியாக செய்யக்கூடிய வெள்ளரிக்காய் சான்ட்விச் எப்படி செய்ய வேண்டும்? என்னென்ன பொருட்கள் தேவை? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

cucumber recipe making ideas

மேலும் படிக்க: இனி ஹார்லிக்ஸ் கடைகளில் வாங்க வேண்டாம்; வீடுகளிலேயே ஈஸியா இப்படி செய்யுங்க!

வெள்ளரிக்காய் சான்ட்விச் ரெசிபி

தேவையானப் பொருட்கள்  

  • பிரட் - 6
  • வெள்ளரிக்காய் - 5
  • கிரீம் சிஸ் - 200 கிராம்
  • ஆலிவ் ஆயில் - தேவையான அளவு
  • மிளகு தூள் - அரை தேக்கரண்டி
  • புதினா, கொத்தமல்லி- 2 கப்
  • எலுமிச்சை சாறு- அரை தேக்கரண்டி

tips to cucumber recipe making

செய்முறை:

  • வெள்ளரிக்காய் சான்ட்விச் செய்வதற்கு முதலில் ஒரு பவுலில் க்ரீம் சீஸ் போட்டு அதில் ஆலிவ் ஆயில், மிளகு தூள், நறுக்கிய புதினா இலை, கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இதையடுத்து வெள்ளரிக்காயை வட்ட வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது வெள்ளரிசானட்விச் செய்வதற்கான அனைத்துப் பொருள்களும் தயார் நிலையில் உள்ளது.
  • பின்னர் பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டிய பின்னதாக, பிரட் துண்டுகளின் மேல் ஏற்கனவே செய்து வைத்துள்ள க்ரீம் சீஸ் கலவையை கொஞ்சமாக தடவிக் கொள்ளவும். இதன் பின்னதாக வெள்ளரி துண்டுகளை அதன் மேல் வைத்த பின்னதாக மீண்டும் க்ரீம் சீஸ் கலவையை அதன் மேல் தடவிய மீண்டும் பிரட் துண்டுகளை அதன் மேல் வைத்தால் போதும். சுவையான வெள்ளரிக்காய் சான்ட்விச் ரெடி.

மேலும் படிக்க: ஆரோக்கியமான சுவையான பால் அல்வா செய்வது எப்படி?

 

sandwich recipe for kids

இதோடு தக்காளி சாஸ் வைத்து பரிமாறினால் போதும் குழந்தைகள் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். இனி என்ன ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்ற கவலை வேண்டாம். ஈஸியாக 10 நிமிடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வெள்ளரிக்காய் சான்ட்விச் ரெடி பண்ணிக் கொடுங்கள்.

Image source- Google

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]