இன்று பலரும் நாகரிகம் என்ற பெயரில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகம் நம்பி உண்கின்றனர். இது உடலுக்கு கடுமையான தீங்குகளை விளைவிக்கும். "ஒரு நாள் மட்டும் சாப்பிட்டால் என்ன?" என்று சொல்லி சொல்லி, பல வருடங்களாக இதை தொடர்ந்து உண்கிறோம். குறிப்பாக ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவோருக்கு இதன் தீங்கு இரட்டிப்பாகும். இன்று ஹோட்டல்கள், தியேட்டர்கள், பூங்காக்கள் போன்ற எல்லா இடங்களிலும் ஸ்னாக்ஸ் மற்றும் உணவுகளுடன் சோடா குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே இந்தப் பழக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரிந்தும், சுவைக்காக தொடர்ந்து இந்த சோடாவை குடித்து வருகிறோம். சிலருக்கு சோடா குடிப்பதில் அடிக்ஷன் ஏற்பட்டு, அதை நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். அந்த வரிசையில் அதிகமாக சோடா குடித்தால் உடலுக்கு என்ன ஆகும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
குளிர்பானங்கள் மற்றும் சோடாக்கள் உடல் நலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவற்றில் அதிக கலோரிகள், அதிக சோடியம் மற்றும் அதிக சர்க்கரை அளவு உள்ளதால், இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், பலர் டயட் சோடாவை ஆரோக்கியமான மாற்றாக கருதுகின்றனர். ஆனால், டயட் சோடா உண்மையில் பாதுகாப்பானதா, அல்லது அதனால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
ஒரு சாதாரண குளிர்பான பாட்டிலில் 50-60 கிராம் சர்க்கரை சேர்க்கப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து சோடா குடிப்பதால் உடல் எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோய், கல்லீரல் பிரச்சனைகள், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும். ஆனால் டயட் சோடாவில் கலோரிகள் இல்லை மற்றும் சர்க்கரையும் சேர்க்கப்படவில்லை. ஆனால், சமீபத்திய ஆய்வுகளின்படி, டயட் சோடா குடிப்பதால் எடை அதிகரிக்கலாம் மற்றும் புற்றுநோய் ஆபத்தும் உள்ளது என்று தெரிகிறது.
டயட் சோடா குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. டயட் சோடா ஜீரோ கலோரி பானம், இதில் சர்க்கரை இல்லை, எனவே எடை குறைய உதவும் என்றும் டயட் சோடா எடையை அதிகரிக்கும் மற்றும் ஆயுளைக் குறைக்கும் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றது. ஒருவரின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கிய நிலை ஆகியவற்றைப் பொறுத்து டயட் சோடாவின் தாக்கம் மாறுபடும் என்பது நிபுணர்களின் கருத்து.
மேலும் படிக்க: ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மாத்திரைகள் வேண்டாம்; தினையை இப்படி சாப்பிட்டால் போதும்
கோக், ஃபாண்டா, ஸ்ப்ரைட் போன்ற பிரபலமான டயட் சோடாக்களில் ஆஸ்பர்டேம் (Aspartame) என்ற செயற்கை இனிப்பூட்டி உள்ளது. இது புற்றுநோய்க்கு காரணமாகலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே, தினமும் டயட் சோடா குடிப்பவர்களுக்கு இந்த ஆபத்து உள்ளது. ஆனால், இது உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஊட்டச்சத்து இல்லாத செயற்கை இனிப்பூட்டிகள் உடல் எடையை அதிகரிக்க வைக்கின்றன என்று கூறப்படுகிறது. டயட் சோடா குடிப்பவர்களுக்கு பசி அதிகரித்து, அதிகம் உணவு உண்ணத் தூண்டுகிறது. இதனால் நாளடைவில் எடை அதிகரிக்கும். ஆனால், இது இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.
டயட் சோடா மற்றும் சாதாரண குளிர்பானங்களுக்கு இடையே கணிசமான சுவை வேறுபாடு உள்ளது. டயட் சோடாவில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் சர்க்கரையை விட 13,000 மடங்கு இனிப்பானவை. இதனால், இயற்கையான சுவை உணர்வு மாறுபட்டுவிடும்.
சோடா பாட்டில்கள் மற்றும் கேன்களில் BPA (Bisphenol-A) மற்றும் எண்டோக்ரைன் டிஸ்ரப்டர்கள் போன்ற வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நம் உடலில் சேருவதால், மூச்சுத் திணறல், இதயப் பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன் சீர்கேடுகள் ஏற்படலாம்.
அந்த வரிசையில் சோடா மற்றும் குளிர்பானங்களை முழுமையாக தவிர்ப்பது சிறந்தது. அதற்கு பதிலாக, தண்ணீர், தேன்-லெமன் கலந்த தண்ணீர், தயிர், மோர் மற்றும் இயற்கை பழச்சாறுகள் போன்றவற்றை நீங்கள் தாகமாக உணரும்போது தேர்வு செய்யலாம்.
Image source: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]