சப்ஜா விதைகளில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி எடை இழப்புக்கும் உதவுகிறது. ஆனால் இதை அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் தீமைகள் அல்லது பக்க விளைவுகளை பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சப்ஜா விதைகளின் தீமைகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
இது குறித்த தகவல்களை NMCH இல் பணிபுரியும் டாக்டர் யோகேஷ் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம். தாவர விதைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி அவர் விளக்கி உள்ளார். மேலும் இது போன்ற விதைகளை அதிகமாக உட்கொள்வது, குறிப்பாக பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணிகள் சப்ஜா விதைகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.
சப்ஜா விதைகளை சாப்பிடுவதால் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் கணிசமாக குறைகிறது.ஆகையால் இது கர்ப்ப காலத்திற்கு ஏற்றதல்ல. இதை சாப்பிடும் பழக்கம் உள்ள கர்ப்பிணிகள் உடனடியாக அதை நிறுத்துவது நல்லது.
அதேசமயம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகும் சப்ஜா விதைகளை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது இரத்தம் உறைதலை தாமதமாக்கும்.
சப்ஜா விதைகளில் அதிகமான மசாலா அல்லது காரம் சேர்த்து சாப்பிடக்கூடாது. இவ்வாறு சாப்பிடுவதால் அதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எல்லாம் அழிந்து விடும். மிக முக்கியமாக சப்ஜா விதைகளை ஊற வைத்த பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். இதை பானத்தில் சேர்த்து குடிப்பதே சிறந்தது, மசாலாக்கள் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு பல நன்மைகளை அள்ளி தரும் தேன்
ஒரு சிலர் சப்ஜா விதைகள் கலந்த பானத்தை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது பலமுறை எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது போன்ற பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். சப்ஜா விதைகளை அதிகமாக சாப்பிடுவதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம். இதை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்வது நல்லது என நிபுணர் அறிவுறுத்துகிறார்.
சப்ஜா விதைகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற அறிகுறிகளும் ஒரு சிலருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இதில் உள்ள அதிகமான நார்ச்சத்தினால் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
எனவே இதன் இதனை அளவோடு எடுத்துக்கொண்டு அதன் முழு நன்மைகளையும் பெற்றெடுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் பழச்சாறுகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]