Oats Benefits: தொப்பையை குறைக்கணுமா? தினமும் காலை ஓட்ஸ் சாப்பிடுங்க!

ஒரு சிலருக்கு உடல் எடை குறைந்தாலும் தொப்பை குறையாமல் இருக்கும். தொப்பையை குறைக்க என்ன செய்யலாம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

oats benefits

நம்மில் பலருக்கும் உடல் எடையை குறைப்பதை விட தொப்பையை குறைப்பது தான் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. என்னதான் ஜிம்மிற்கு சென்று மணிக்கணக்காக உடற்பயிற்சி செய்து வியர்வை சிந்தினாலும் அல்லது உணவு கட்டுப்பாட்டுடன் ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும் சிலருக்கு இந்த தொப்பை குறைப்பது மிக கடினமாக உள்ளது. இன்னும் சிலர் எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் உணவு கட்டுப்பாடு இல்லாமல் உடல் எடை குறைக்க விரும்புகிறார்கள். இவர்கள் உடல் எடை குறைக்க தங்கள் காலை உணவில் சில சிறிய மாற்றங்களை செய்தால் போதும், இதில் சுமார் 1 அல்லது 2 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம். மேலும் இது உங்கள் உடல் எடையை குறைப்பதன் மூலம் தொப்பை கொழுப்பை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. உடற்பயிற்சியே செய்யாமல் தொப்பையை குறைப்பது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நீங்கள் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காமல் இருந்தால் மற்றும் உடல் எடையை எளிதாக குறைக்க விரும்பினால் தினமும் காலை உணவில் ஓட்ஸை சேர்த்து சாப்பிட்டு வரலாம். இந்த ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பி வைத்து இருக்க உதவுவதன் மூலம் அடிக்கடி பசி எடுக்காமல் இருக்கும். நீங்கள் காலையில் இந்த ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் விரைவாக பசி ஏற்படாத நிலையில் தேவையற்ற நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதையும் தவிர்ப்பீர்கள்.

ஓட்ஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன?

oats for fat loss

இந்த ஓட்ஸ் சாப்பிடும் போது சுவை சற்று குறைவாக தான் இருக்கும். ஆனால் இதன் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். நம் உடலுக்கு நன்மை பயக்கும் பல ஊட்டச்சத்துகளால் இந்த ஓட்ஸ் நிறைந்துள்ளது. ஓட்ஸில் புரதச்சத்து மற்றும் சீரான அமினோ விலங்குகள் அதிக அளவு காணப்படுகின்றது. இவை இரண்டுமே உங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். அதேபோல ஓட்ஸில் அதிக நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. இது உங்கள் உணவு செரிமானத்தை சிறப்பாக மேம்படுத்தி வைத்திருக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதனை காலை உணவில் உட்கொள்வது நம் உடலில் உள்ள வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவும். அதுமட்டுமில்லாமல் இந்த ஓட்ஸில் மாங்கனிஸ் பாஸ்பரஸ் துத்தநாகம் செலினியம் இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக இது தொப்பை கொழுப்பை குறைத்து இடிப்பு பகுதியில் உள்ள கொழுப்புக்களையும் கரைக்க உதவுகிறது.

இந்த ஓட்ஸ் எப்படி சாப்பிடுவது?

கால் கப் ஓட்ஸ் எடுத்து தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும். அதில் சிறிது உப்பு அல்லது சர்க்கரை தேவைக்கேற்ப சேர்த்து சாப்பிட்டு வரலாம். இந்த ஓட்ஸ் சற்று சுவை குறைவாக இருப்பதால் இதனுடன் பழங்களை சேர்த்து சாப்பிட்டு வரலாம். இது மட்டுமில்லாமல் இந்த ஓட்ஸ் உடன் சேர்த்து சியா விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளும், உளர் திராட்சை மற்றும் நட்ஸ் வகைகளையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் மேம்படும். இது போல ஓட்ஸ் சாப்பிட கடினமாக இருந்தால் இந்த ஓட்ஸை அரைத்து ஓட்ஸ் தோசை செய்து சாப்பிடலாம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP