தற்போதைய நவீன காலத்து பெண்கள் பலரது மத்தியிலும் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்று ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை வாங்கி தினசரி பயன்படுத்தி வருகிறார்கள். என்னதான் அழகு சாதன பொருட்களை வாங்கி தினமும் பயன்படுத்தி வந்தாலும், எதிர்பார்த்த முக அழகு முடிவுகள் விரைவில் கிடைப்பதில்லை. இதற்கு நாம் சரியான உணவு முறை பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, முகத்தை பொலிவு பெறச் செய்ய தேவையான வைட்டமின்கள் கலந்த பழங்களை சாப்பிட தொடங்க வேண்டும். அதேபோல் சரிவிகித உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக காலை, மதியம், இரவு என அதற்கான நேரங்களில் உணவை சாப்பிட்டு முடித்து தேவையான அளவு தூங்கி ஆரோக்கியமாக அதிகாலை எழுந்து கொள்ள வேண்டும்.
இப்படி சரியாக செய்தால் உங்கள் முகம் அழகிற்கு தயாராகிவிடும்
- சில நாட்களிலேயே உங்கள் முகம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டும் என்றால் இந்த ஆரோக்கியமானத்தை வீட்டிலேயே தயார் செய்து குடிக்க தொடங்குங்கள்.
- இந்த அழகு பாலத்தில் கலந்து இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றுமே முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து எப்போதும் உங்கள் முகத்தை பளபளப்பாக ஜொலிக்க வைத்துக் கொண்டே இருக்கும்.
- வெயில் காற்று மாசுபாடுகளால் உங்கள் முகம் கருமை அடைந்து முக தழும்புகளால் பொலிவு இழந்து சுருக்கமடைந்து காணப்பட்டால் இந்த வானம் உங்கள் அனைத்து பிரச்சனையையும் சரி செய்து முகத்தை பொலிவு பெறச் செய்யும்.
முகத்தை அழகு படுத்தும் இயற்கை பானம்
உங்கள் முகம் எப்போதும் பளபளப்பாக, இளமையாக இருக்க வேண்டுமா? இந்த இயற்கையான ஐந்து பொருட்களை கலந்த பானத்தை தினமும் குடித்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்
- ஒரு கிளாஸ் மிதமான சுடு தண்ணீர்
- சோம்பு ஒரு டீஸ்பூன்
- ரோஸ்மேரி ஒரு டீஸ்பூன்
- சியா விதைகள் ஒரு டீஸ்பூன்
- எலுமிச்சம் பழம் சாறு ஒரு டீஸ்பூன்
- துளசி இலைகள் - 5
செய்முறை
- 200 மில்லி தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து நேரம் ஆற வைக்கவும்.
- மிதமான சூட்டில் ஒரு டீஸ்பூன் சோம்பு கலக்கவும்.
- ரோஸ்மேரியை சுடுதண்ணீரில் கலந்து விடவும்,
- பின்னர், ஒரு டீஸ்பூன் சியா விதைகளை சுடுதண்ணீரில் கலக்கவும்.
- தொடர்ந்து எடுத்து வைத்த துளசி இலைகளை போடவும்.
- இறுதியாக ஒரு டீஸ்பூன் தேனை கலக்கவும்.
- ஒரு 20 நிமிடம் அந்த மூலிகை தண்ணீரை ஊற வைக்கவும்.
- பின்னர் இந்த அழகு பானத்தை அப்படியே குடிக்கவும்.
- தினமும் இந்த பானத்தை தயார் செய்து காலை வெறும் வயிற்றில் குடித்து வரவும்.
இயற்கை பானத்தின் அழகு நன்மைகள்
- இப்படியே 15 நாட்களுக்கு இந்த செய்முறையை தயார் செய்து குடித்து வந்தால் உங்கள் முகம் எந்த ஒரு முகச்சுருக்கமும் இல்லாமல் பல பலப்பாக ஜொலிக்கும் தன்மையை அடையும்.
- முகத்தில் வரும் முகப்பருக்கள் அனைத்தும் குணமடைந்து, ஏற்கனவே இருந்த கருப்பு தழும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கும்.
- வயதான தோற்றமாக இருந்த முகச்சுருக்கங்கள் படிப்படியாக குறைந்து முகம் பொலிவாக மாறத் தொடங்கும்.
- இந்த இயற்கையான பானத்தை 25 வயது பெண்கள் தினமும் குடிக்க தொடங்கினால் சில நாட்களிலேயே உங்கள் முகம் பளபளப்பாக மாறுவதை உங்களாலே உணர முடியும்.
மேலும் படிக்க:இரண்டு சொட்டு போதும் முகம் ஜொலிக்கும், உங்களுக்கான சொந்த ஹைலூரோனிக் சீரத்தை இப்படி தயாரித்து கொள்ளுங்கள்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation