நொய்டாவைச் சேர்ந்த நியூட்ரிட்டுவின் நிறுவனர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் பரத்வாஜ் கூறுகையில், “உடல் எடையை குறைக்க மக்கள் பசிக்கும் போது உணவைக் கைவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் உணவுத் திட்டம் என்றால் நீங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சேர்ப்பது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்”. நாள் முழுவதும் நாம் எதை சாப்பிடுகிறோமோ அதுவே நமது எடை அதிகரிக்க காரணமாகும். எனவே உணவில் இருந்து அவற்றை நீக்கிவிட்டு ஆரோக்கியமான உணவை தேர்வு செய்ய வேண்டும்.
இதன் பின் நல்ல தூக்கம், போதுமான தண்ணீர் மற்றும் வெறும் 1 மணிநேரம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் எடையைக் கட்டுப்படுத்தலாம். இது தவிர, உடல் எடையைக் குறைத்து, உணவுத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உடல் நிறை குறியீட்டெண், உடல்நலப் பிரச்சனைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு அதன் பிறகுதான் புதிய உணவைத் தொடங்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: இது தெரிஞ்சா இனி விட மாட்டிங்க..!! கறிவேப்பிலை தேநீரில் இருக்கும் 6 நன்மைகள்
வெந்தய நீருடன் காலை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு 2 டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் வெந்தயத் தண்ணீரை முதலில் குடிக்கவும். வெந்தயத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி கொலஸ்ட்ரால் குறையும். செரிமான சக்தியை மேம்படுத்துவதோடு, அமிலத்தன்மை பிரச்சனைக்கும் நிவாரணம் அளிக்கிறது.
வெந்தய நீர் அருந்திய பின் அரை மணி நேரம் கழித்து 3-4 பாதாம் (ஊறவைத்தது) மற்றும் அக்ரூட் பருப்புகள் சாப்பிடுங்கள். இவை இரண்டிலும் வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது.
காலை உணவில் 2 இட்லி மற்றும் சாம்பார் சாப்பிடலாம். இது தவிர பரோட்டா உடன் பருப்பு கலவை, காய்கறிகளுடன் சேர்த்து கருப்பு கடலை, ராகி உடன் காய்கறி சேர்த்து அடை மற்றும் வேர்கடலை சட்னி சாப்பிடலாம். காலை உணவில் எதைச் சாப்பிடுகிறீர்களோ அதனுடன் வேகவைத்த முட்டையைச் சேர்க்கவும். 1 மாதத்தில் இந்த மூன்று பொருட்களையும் மாறி மாறி சாப்பிடலாம். இதன் மூலம் ஒரே மாதிரியான உணவை உண்பதில் சலிப்பு ஏற்படாது.
குறிப்பு: 30 நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் மஞ்சள் பால் குடிக்க வேண்டும்.
காலை உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பியிருக்கும் ஆனால் அதற்குள் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், ஆரஞ்சு, திராட்சைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, கிவி போன்ற சிட்ரிக் பழத்தை சாப்பிடலாம். இது தவிர முளை கட்டிய பருப்பு சாலட். இதை சாப்பிடுவதன் மூலம் பசி அமைதியாக இருக்கும் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது உணவை ஜீரணிக்க உதவியாக இருக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் மற்றும் எடை குறைக்க உதவும்.
கிரீன் டீ அல்லது மசாலா டீ குடிக்கலாம். நீங்கள் க்ரீன் டீ எடுத்துக் கொள்ளலாம். கிரீன் டீ எடுத்தால் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும். கிரீன் டீ அல்லது மசாலா டீ உடல் எடையை குறைக்க உதவுகிறது. அவை செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் சிறந்தவை.
பகலில் 1 கிண்ணம் கம்பு மற்றும் பருப்பு கிச்சடியுடன் கலந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும். இது தவிர பனீர் மற்றும் வெஜிடபிள் ரைஸ் மற்றும் ஒரு கப் தயிர், 1 கிண்ண சாம்பாருடன் 2 தினை உத்தாபம், 1 மல்டிகிரைன் ரொட்டி ஆகியவற்றை சாப்பிடலாம். இந்த வழக்கம் ஒரு மாதத்திற்கு பின்பற்றலாம்.
மதிய உணவு சாப்பிட்ட உடனே சுமார் 10 நிமிடங்கள் உட்கார வேண்டாம். பின் 1 மணி நேரம் கழித்து பச்சை தேநீர் அல்லது மசாலா தேநீர் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்.
மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் பசி எடுத்தால் பழம் அல்லது ஒரு சிறிய கிண்ணத்தில் உலர்ந்த வறுத்த மக்கானாவை சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். மக்கானா சத்துக்கள் நிறைந்தது. இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க மகானா உதவுகிறது. இது பசியைக் குறைத்து உங்களை முழுமையாக வைத்திருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் இப்படி பூண்டை சாப்பிடுங்கள்.. அப்புறம் பாருங்கள் அற்புத நிகழ்வுகளை!!
சிற்றுண்டி சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து பானம் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
இரவில் உடல் அதிக சுறுசுறுப்பாக இருக்கத்தால் உணவை ஜீரணிக்க நேரம் எடுக்கும். இரவு உணவை இலகுவாக சாப்பிட வேண்டும். கலந்த காய்கறிகள் மற்றும் 1 மல்டிகிரைன் ரொட்டியுடன் சிறிது கலந்த விதைகள் சாலட் சாப்பிட வேண்டும். இது தவிர பிரவுன் ரைஸ், பருப்பு மற்றும் கலந்த சாலட் எடுத்துக் கொள்ளவும். இரவில் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடலாம்.
குறிப்பு: இதற்குப் பிறகும் பசி எடுத்தாலோ அல்லது தாமதமாக எழுந்தாலோ தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் மஞ்சள் பால் அல்லது மசாலா டீ குடிக்கலாம். இதற்கிடையில் நாள் முழுவதும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் மாதம் முழுவதும் நீர் உட்கொள்ளலை சிறிது சிறிதாக அதிகரிக்கவும். 7 மணிநேரம் போதுமான அளவு தூங்குங்கள்,1 மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள், இதில் ஜாகிங், ஓட்டம் மற்றும் வேகமாக நடைபயிற்சி ஆகியவை அடங்கும்.
உணவியல் நிபுணரின் இந்த உணவுத் திட்டம் உங்கள் எடையைக் குறைக்க உதவும் என்று நம்புகிறோம். இந்தக் கட்டுரை லைக் செய்யுங்கள், மேலும் இது போன்ற உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ்களை தினமும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Image credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]