காலையில் எழுந்ததும் டீ, மாலையில் ஒரு டீ, மழை பெய்தாலும் டீ, நண்பனை பார்க்க சென்றால் அங்கேயும் டீ. இப்படி நம் அன்றாட வாழ்வில் இந்த டீ முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. தேநீர் என்பது பலருக்கும் பிடித்தமான ஒரு பானம். காலையில் தொடங்கி மாலை வரை பலர் தேநீரை எண்ணிக்கை இல்லாத அளவிற்கு அதிகம் அருந்துகிறார்கள். ஆனால், சில உணவுகளை இந்த தேநீருடன் சேர்த்து உண்ணும்போது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இந்தக் கட்டுரையில் தேநீருடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான கீரை, பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்றவற்றை டீயுடன் சேர்த்து உண்ணக்கூடாது. டீயில் உள்ள டானின்கள் எனப்படும் வேதிப்பொருட்கள், உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கின்றன. இதனால் உங்களுக்கு இரத்தசோகை (Anemia) போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
சிலர் பாலுடன் டீயை கலந்து அருந்துகிறார்கள். ஆனால், டீயில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம், பாலில் உள்ள கால்சியத்துடன் சேர்ந்து கால்சியம் ஆக்சலேட் எனும் கல்லீரல் கற்களை உருவாக்கும் பொருளாக மாறுகிறது. இது சிறுநீரகக் கற்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரொட்டி, இட்லி, தோசை போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை டீயுடன் சேர்த்து உண்ணும்போது, உடலில் சர்க்கரை அளவு திடீரென உயரலாம். டீயில் உள்ள காஃபின் இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் நீரிழிவு மற்றும் சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஆபத்தானதாக இருக்கலாம்.
மீன், பருப்பு வகைகள் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை தேநீருடன் சேர்த்து உண்ணும்போது, உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவது குறைகிறது. இதனால், எலும்புகளின் வலிமை குறைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
தேநீருடன் காரம் அல்லது புளிப்பு நிறைந்த உணவுகளை சேர்த்து உண்ணும்போது, வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இது காலப்போக்கில் வயிற்றுப் புண், அல்சர் மற்றும் இரைப்பைப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
சிலர் மருந்துகளை தேநீருடன் சேர்த்து உட்கொள்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. தேநீரில் உள்ள காஃபின் மற்றும் டானின்கள், மருந்துகளின் செயல்பாட்டை குறைக்கலாம் அல்லது மருந்துகளின் பக்க விளைவுகளை அதிகரிக்கலாம். எனவே டீ குடித்த உடனே மாத்திரை சாப்பிடாதீர்கள்.
என்ன தான் தேநீர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது என்றாலும் சரியான உணவுகளுடன் அதை அருந்தாவிட்டால், உடலுக்கு பல தீமைகள் ஏற்படலாம். எனவே, மேலே குறிப்பிட்ட உணவுகளை தேநீருடன் சேர்த்து சாப்பிடாமல் பாதுகாப்பான உணவு முறைகளை பின்பற்றுவது நல்லது.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]