உணவுக்கு நல்ல சுவையையும் மணத்தையும் கொடுக்கும் பெருங்காயத்தை பொங்கல், சாம்பார், ரசம் என பல்வேறு உணவுகளில் பயன்படுத்துகிறோம். உணவுக்கு சுவை கொடுப்பதோடு மட்டுமின்றி, பெருங்காயத்தில் சிறப்புமிக்க மருத்துவ நன்மைகளும் ஏராளமாக உள்ளன. பெருங்காயம் செரிமானத்திற்கும் எடை இழப்புக்கும் சிறந்தது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றன.
காய்கறி குழம்பு போன்ற உணவுகளில் பெருங்காயத்தை சேர்ப்பதை தவிர, அதை தண்ணீரிலும் கலந்தும் குடிக்கலாம். இந்த பெருங்காயத் தண்ணீரில் அற்புதமான நன்மைகள் நிறைந்துள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 டீஸ்பூன் பெருங்காய பொடி சேர்த்து நன்கு கலக்கவும். இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் அதிகபட்ச நன்மைகளை பெறலாம்.
பெருங்காயத் தண்ணீரின் நன்மைகள் பின்வருமாறு
செரிமானம் தொடர்பான பிரச்சனையில் இருந்து விடுபட பெருங்காயம் உதவும். இது அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணமான தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை செரிமான மண்டலத்தில் இருந்து நீக்குகிறது. இது செரிமான செயல்முறையை சீராக்கி, வயிற்றின் PH அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வரும்.
பெருங்காயத் தண்ணீர் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. அதிகரித்த வளர்ச்சிதை மாற்றத்தால் உடல் எடையை விரைவாக குறைக்கலாம். இதனுடன் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவுகளையும் கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தையும் பராமரிக்கலாம்.
ஊட்டச்சத்து நிபுணரும், My22BMI இன் தலைமை நிர்வாக அதிகாரியுமான ப்ரீத்தி தியாகி அவர்கள் பெருங்காயத் தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதோடு எடை இழப்புக்கும் உதவுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும் பிரச்சனை இருக்கும். இந்நிலையில் சளி மற்றும் சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபட பெருங்காயத் தண்ணீரை குடிக்கலாம்.
பெருங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தலைவலியை சமாளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தலையின் இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. எனவே தலைவலியில் இருந்து நிவாரணம் பெற சிறிது பெருங்காயத் தண்ணீர் குடிக்கலாம்.
சில சமயங்களில் மாதவிடாய் வலி கடுமையாக இருக்கும். இந்நிலையில் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் முதுகு மற்றும் அடிவயிற்று வலியை குறைக்க பெருங்காயத் தண்ணீரை குடிக்கலாம். இது இரத்தத்தை மெலிதாகி, மென்மையான உதிரப்போக்கிற்கு உதவுகிறது. மாதவிடாய் வலியில் இருந்து இயற்கையான முறையில் நிவாரணம் பெற பெருங்காயத் தண்ணீர் சிறந்தது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெருங்காயம் உதவுகிறது. இது உங்கள் கணைய செல்களைத் தூண்டுவதால் அதிக இன்சுலின் சுரக்கும். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் மஞ்சள் நீர் குடிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றங்களா?
பெருங்காயத்தில் உள்ள கலவைகள் இரத்தம் உறைவதை தடுக்கின்றன. இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
சிறந்த பலன்களை பெற பெருங்காயத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. தண்ணீரில் கலந்து குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் மோரிலும் கலந்து குடிக்கலாம். பெருங்காயத்தை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து உடல் ஆரோக்கியத்துடன் சிறப்பாக வாழுங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]