Heart Health Food : இந்த 1 உணவு போதும், குறைந்த செலவில் இதய நோய்களை தடுக்கலாம்!

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை சாப்பிடுங்கள். விலை மலிவான இந்த உணவை சாப்பிட்டு இதய நோய்களை தடுக்கலாம்…

heart health food peanut expert tips

வேர்க்கடலை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு ஆராய்ச்சியின் படி, வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபாயத்தை பெருமளவு குறைக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. வேர்க்கடலை இதய நோய்களின் அபாயத்தை குறைத்து ஆயுளை அதிகரிக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு வேர்க்கடலை

எல்லா உறுப்புகளை போலவே இதயமும் பல காரணங்களால் நோய்வாய்ப்படுகிறது. அதிக கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, குறைந்த உடல் செயல்பாடு, தவறான வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் இதய நோய்கள் ஏற்படலாம். இதய தமனிகளில் அடைப்பு, மாரடைப்பு போன்ற இதய நோய்களை தடுக்க வேர்க்கடலையை சாப்பிடலாம். இது இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை பெரும் அளவு குறைப்பதாக அமெரிக்காவின் வாண்டர்பிலிட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது

வேர்க்கடலையில் புரதம் கலோரிகள் வைட்டமின் B, E, K, இரும்புச்சத்து, ஃபோலேட், கால்சியம், நியாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் பச்சை வேர்கடலையில் மட்டுமே ஒரு லிட்டர் பாலுக்கு நிகரான புரதம் உள்ளது. இதில் 25 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் புரதச்சத்துக்கள் உள்ளன. அதே சமயம் இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுகளில் 10 சதவீதற்கு மேல் புரதச்சத்துக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உப்பு சேர்க்கப்பட்ட வேர்க்கடலையை குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

groundnuts for heart

வேர்க்கடலையில் காணப்படும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு இதயத்திற்கு மிகவும் நல்லது. இது இரத்தத்தில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. மேலும் வேர்க்கடலையை வாரத்திற்கு 2-3 முறை சாப்பிட்டு வந்தால் புற்று நோயையும் தடுக்கலாம்.

ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த உணவு இது. உலகம் முழுவதும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், இது போன்ற பாதிப்புகளை தடுக்க வேர்கடலையை சாப்பிடலாம். வேர்க்கடலை சாப்பிடுபவர்கள் அகால மரணம் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஃப்ளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய மற்றொரு ஆய்வில் வேர்க்கடலை இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதாக தெரியவந்துள்ளது.

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை ஏன் சாப்பிட வேண்டும்?

heart health

வேர்க்கடலை சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது. இதில் நல்ல கொழுப்புகள் உள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 67 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவது, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவுகளை ஐம்பது சதவீதம் வரை குறைக்கிறது. வேர்க்கடலை இரத்த நாளங்களுக்கும் நன்மை தரும். இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உணவு கட்டுப்பாடு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிடுங்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு இதயத்தை தவறாமல் பரிசோதித்து கொள்வதும் நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: 10 வயசு குறைஞ்சு இளமையாக தெரிய, இந்த 3 யோகாசனங்களை செய்யுங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP