Tea During Weight Loss : உடல் எடையை குறைக்க எப்படி டீ குடிக்க வேண்டும் தெரியுமா?

உங்க்ள உடல் எடையை குறைக்கும் பயணத்தில் டீ குடிப்பதை தவிர்க்க முடியவில்லையா? இனி இப்படிவில் பகிரப்படுள்ள முறையில் டீ செய்து குடிக்கலாம்…

can i drink tea during weight loss journey

உடல் எடையை குறைக்கும் பொழுது பல விஷயங்களை தவிர்க்க வேண்டி உள்ளது. ஒரு சில விஷயங்களை சுலபமாக தவிர்த்து விடலாம். ஆனால் மனதுக்கு பிடித்த நாம் அன்றாடம் செய்யக்கூடிய ஒரு சில விஷயங்களை தவிர்ப்பது சற்று கடினமாக இருக்கலாம். அந்த வகையில் டீ குடிப்பதை தவிர்க்க முடியாத பலரும் உள்ளனர். காலை மாலையை தவிர்த்து மற்ற நேரங்களில் டீ குடிப்பதற்காக காரணம் தேடும் டீ பிரியர்களும் ஏராளம்.

உங்கள் எடை இழப்புக்காக டீ குடிப்பதை நிறுத்தி விட்டீர்களா? டீ குடித்து உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்த தகவல்களை இப்பதிவில் படித்தறிந்து பயன்பெறுங்கள். உங்களுடைய எடை இழப்பு பயணத்தில் டீ குடிப்பதையும் தொடரலாம். இதை பற்றிய தகவல்களை நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்வோம். டீ எடுத்துக் கொள்ளும் முறை குறித்து உணவியல் நிபுணரான ராதிகா கோயல் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டீ குடிப்பதை ஏன் தவிர்க்க வேண்டும்?

tea for weight loss

பால் கலந்த டீயில் அதிக கலோரிகள் உள்ளன. இதை ஒரு நாளைக்கு 2-3 முறை நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது அன்றைய நாளின் கலோரி உட்கொள்ளல் அளவும் அதிகரிக்கும். இதைத் தவிர்த்து எடை இழப்பு பயணத்தில் டீ குடிப்பதை தவிர்க்குமாறு சில உணவியல் நிபுணர்களும் பரிந்துரை செய்கிறார்கள். மேலும் டீயுடன் நாம் எடுத்துக் கொள்ளும் சிற்றுண்டிகளாலும் உடல் எடை மேலும் அதிகரிக்கலாம். இந்நிலையில் டீ மற்றும் சிற்றுண்டிகளை ஆரோக்கியமானதாக மாற்றுவதன் மூலம் எவ்வித இடையூறும் இன்றி உங்கள் எடை இழப்பு இலக்கை விரைவில் அடையலாம். உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை டீ எடுத்துக் கொள்ளலாம். மேலும் காக்ரா, தாமரை விதை, பொட்டுக்கடலை போன்ற எண்ணெய் சேர்க்காத சிற்றுண்டிகளை சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை குறைய முட்டையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாபிட்டால் போதும்

டீ குடிக்கும் முறை

how to drink tea for weight loss

  • சர்க்கரை சேர்க்காமல் டீ குடிக்கவும்
  • சர்க்கரைக்கு பதிலாக சிறிய அளவில் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
  • கிரீம் இல்லாத கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் டீ போட்டு குடிக்கலாம்.
  • டீ தயாரிக்கும் பொழுது பால் மற்றும் தண்ணீரை சம அளவில் எடுத்துக் கொள்ளவும்.
  • டீ தயாரிக்கும் பொழுது பட்டை, கிராம்பு அல்லது இஞ்சி போன்றவற்றை சேர்க்கலாம்.
  • டீ குடிக்கும் பொழுது எண்ணெயில் பொறிக்கப்பட்ட சிற்றுண்டிகளை தவிர்க்கவும்.
  • உணவுடன் சேர்த்து டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே டீ குடிக்கவும்.
  • உங்களுக்கு காலையில் டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் காலை உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது உணவிற்கு பின் ஒரு மணி நேரம் கழித்தோ டீ குடிக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP