காய்கறிகள் என்று சொன்னாலே பீட்ரூட்டையும் கேரட்டையும் நம்மால் தவிர்க்க முடியாது. அந்த அளவிற்கு பீட்ரூட்டும் கேரட்டும் நமது உணவு காய்கறி பட்டியலில் மேலோங்கி காணப்படும். பீட்ரூட் கேரட்டின் அழகான பிரகாசமான நிறம் அதன் தனித்துவமான சுவையால் அதை எப்போதும் நாம் தவிர்க்க முடியாது.
சமைத்து உண்ணும் போது எந்த அளவிற்கு நமக்கு ஆரோக்கியத்தையும் சுவையும் பீட்ரூட், கேரட் தருகிறதோ அதே அளவிற்கு அதை சமைக்காமல் பச்சையாக பல்வேறு முறைகளில் நாம் உண்ணும் போது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை இவை இரண்டும் நமக்கு தருகிறது.
பீட்ரூட் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கும், ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், உடலில் சேரும் நச்சுகளை சரி செய்வதற்கும் பெரிதும் பயன்படுகிறது. கேரட்டில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் நமது உடலுக்கு பல வகைகளில் நன்மை செய்கிறது.
கேரட் மற்றும் பீட்ரூட் சாறு குடித்தால் நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் வரும். எப்போதும் நாம் புத்துணர்ச்சியோடும் ஆரோக்கியமாக வாழ கேரட் மற்றும் பீட்ரூட் சாறை தினசரி நாம் எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே எப்போது சந்தைக்குச் சென்றாலும் யோசிக்காமல் இந்த இரண்டு காய்கறிகளையும் வாங்கி செல்வது நமது ஒட்டு மொத்த வாழ்வை மேம்படுத்தும்.
மேலும் படிக்க: தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும்!
பீட்ரூட் மற்றும் கேரட் சாறு ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கும் பீச்சில் வீட்டின் இதில் இருப்பதால் நச்சுத்தன்மையை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு உதவுகிறது. கேரட் சாறு உடலில் இருந்து நச்சுக்களை திறம்பட வெளியேற்ற உதவுகிறது
கேரட் மற்றும் பீட்ரூட் உடல் வீக்கத்தை குணப்படுத்த உதவுகின்றன. அலற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சியை குணப்படுத்த உதவும் ஆக்சிஜனேற்ற பண்புகள் இவை இரண்டிலும் இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பீட்ரூட் மற்றும் கேரட் வளர்சிதை மாற்ற அமைப்பை தூண்டி மலச்சிக்கலை போக்க பெரிதும் உதவுகிறது. இந்த காய்கறிகளில் உள்ள பைட்டோ ஊட்டச்சத்துக்கள் செரிமான அமைப்பை அதிகரிக்க உதவுகிறது. கேரட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது இது இரத்த சர்க்கரை அளவை சமன் செய்வது மட்டுமில்லாமல் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பீட்ரூட் ஒரு நைட்ரேட் உணவாக இருப்பதால் பீட்ரூட் சாறு ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த நைட்ரேட்டுகள் பின்னர் நைட்ரிக் ஆக்சைடாக மாறுகின்றன.இது தமனிகளை தளர்த்தும் மூளைக்குள் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜனேற்றத்தை மேம்படுத்தும் கலவையாகும்.
இந்த இரண்டு காய்கறிகளிலும் பீட்டா கரோட்டின் உள்ளது இது வைட்டமின் ஏ- வை உற்பத்தி செய்ய பயன்படுகிறது. இந்த வைட்டமின் ஆரோக்கியமான பார்வையை ஊக்குவிக்கும் மற்றும் மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை போன்ற கண் பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்பை குறைக்கிறது.
கேரட் மற்றும் பீட்ரூட்டில் போதுமான அளவு இரும்புச்சத்து இருப்பது ஆரோக்கியமான ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. பீட்ரூட் கேரட் சாறு உட்கொள்வது ரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்க உதவும் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் மற்றும் மாதவிடாய் அறிகுறிகளுக்கு ஒரு நல்ல வீட்டு தீர்வாக இரண்டு காய்கறிகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கேரட் பீட்ரூட் சாரில் வைட்டமின் சி உள்ளது இது தோல் நிறமியை தடுக்க உதவுகிறது. இதன் மூலம் உங்களுக்கு ஒரு சீரான தோல் மற்றும் ஒளிரும் சருமத்தை அளிக்கிறது. பீட்ரூட் மற்றும் கேரட் தாதுக்களின் நல்ல ஆதாரங்கள் ஆகும். அவை உயிரற்ற முடியை சரி செய்ய உதவுவதோடு முடி மேலும் உடைவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது.
கேரட் பீட்ரூட் சாறு இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்தவும் பராமரிக்கவும் உதவும் இதில் நைட் ரேட்டுகள் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்
இந்த புத்துணர்ச்சியூட்டும் பானத்தை செய்யும் போது அதில் புதினா மற்றும் இஞ்சி சேர்ப்பதால் சுவையை கூடுதலாகும் புதினாவில் நறுமணம் இருப்பதால் குடிக்கும்போது புத்துணர்ச்சியை தரும்.
பீட்ரூட், கேரட், இஞ்சி, புதினா மற்றும் கருப்பு மிளகு உள்ளிட்ட அனைத்து ஆரோக்கியமான பொருட்களை கலந்து கேரட் பீட்ரூட் சாறை செய்தால் அதிசய பானமாக இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு தரும்.
மேலும் படிக்க: புத்துணர்ச்சியூட்டும் செலரி ஜூஸ் செய்வது எப்படி?
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]