நம்மில் பலருக்கும் இந்த சைவ சிக்கன் பிடிக்கும். பிரியாணி, கறி, காய்கறி சாலட் என்று பல உணவுகளில் இந்த சோயாவை சேர்த்து சமைக்கலாம். சைவ சிக்கன் என்று கூறப்படும் இந்த சோயா சங்க்ஸ் அதிக அளவு புரதச்சத்து கொண்டுள்ளது. சோயா எண்ணெய் உற்பத்தியின் துணைப் பொருளான கொழுப்பு நீக்கப்பட்ட சோயா மாவிலிருந்து தயாரிக்கப்படும் சோயா சங்க்ஸ் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. 100 கிராம் சோயாபீன்ஸில் 52 கிராம் புரதம், 13 கிராம் நார்ச்சத்து மற்றும் 35 கிராம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
சோயாபீன்களில் புரதம் நிறைந்துள்ளதால், சைவ உணவு உண்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சோயாபீன்களில் உள்ள புரதம் இறைச்சி, முட்டை மற்றும் பாலில் உள்ள புரதத்துடன் ஒப்பிடத்தக்கது. நம் உணவில் சோயா சேர்த்து சாப்பிட்டு வந்தால் வேகமான வளர்சிதை மாற்றம், தசை அமைப்பு மற்றும் ஆரோக்கியமான தோல், முடி மற்றும் மூட்டுகள் போன்ற புரதத்தின் நன்மைகளைப் பெறுவோம். சோயா சாப்பிடுவதினால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
சோயா நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று 2015 ஆம் ஆண்டு ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் பீன் பால்ஸ் இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். அவை கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன.
சோயாபீன்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அடிக்கடி பசி ஏற்படாமல் தடுத்து, அதிகம் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தை குறைக்கிறது. சமீபத்தில் வெளியான மருத்துவ ஆராய்ச்சியின் படி, சோயாபீன்களில் உள்ள சோயா ஐசோஃப்ளேவோன்கள் நமது உடல் உறுப்புகளைச் சுற்றி கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. இது உங்களுக்கு வேகமாக எடை குறைவதற்கு வழிவகுக்கும். எடை குறைக்க விரும்புவோர் உங்கள் டயட்டில் இந்த சோயாவை சேர்த்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: ஆப்பிள் சிடர் வினிகரில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
சோயாபீன்ஸ் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். உடலின் செரிமானத்திற்கு இது மிகவும் அவசியம். சோயா ஃப்ளேக்ஸின் வழக்கமான நுகர்வு நாம் உட்கொள்ளும் உணவு செரிமானத்திற்கு உதவும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த சோயா சங்க்ஸ் பீன்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சோயாபீன்ஸில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக மருத்துவ ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் தினசரி உணவில் சோயா சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
ஒரு நாளுக்கு 25-30 கிராம் சோயா சாப்பிடுவது நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க உதவுகிறது. இந்த அளவு சோயா எடுத்துக் கொண்டால் போதுமானது. ஒருவேளை அதிக அளவு சோயா எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும். மேலும் நம் உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்க சோயாவை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]