நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் விஷயங்களைப் பற்றி நினைக்கும் போது, நமக்கு முதலில் ஆப்பிள் தான் நினைவுக்கு வரும். ஆப்பிள்களில் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளது. அதே போல ஆப்பிள் சிடர் வினிகரின் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். ஆப்பிள் சிடர் வினிகர் என்பது புளிக்க விடப்பட்ட ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஆப்பிள் சிடர் வினிகர் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பதன் நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. நச்சு கிருமிகளைக் கொல்லும் சிறப்புப் பண்புகளை இந்த ஆப்பிள் சிடர் வினிகர் கொண்டிருப்பதால், கிருமிகளை எதிர்த்துப் போராடவும் இது உதவும். இது பெரும்பாலும் அசிட்டிக் அமிலத்தால் ஆனது. இதனால் இதன் சுவை சற்று புளிப்பாக இருக்கும்.
ஆப்பிள் சிடர் வினிகர் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். நாம் உணவு சாப்பிட்ட பிறகு ஆப்பிள் சிடர் வினிகருடன் சிறிது தண்ணீர் சேர்த்து குடித்தால், அது நம் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும். படுக்கைக்கு முன் அல்லது காலையில் எழுந்தவுடன் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் தண்ணீரில் கலந்து குடிப்பதும் நமது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். ஆனால், இந்த வினிகரை நேராக குடித்தால் பற்கள் பாதிப்படையும் என்பதால், தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
மேலும் படிக்க: அரிசி சாதம் வடித்த கஞ்சியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
மூன்று மாதங்களுக்கு தினமும் காலை இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், அது சுமார் 1.7 கிலோ வரை எடையை குறைக்க உதவும். இது உங்களுக்கு பசியை குறைத்து உங்கள் உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்த உதவுகிறது. உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு ஆப்பிள் சிடர் வினிகர் சிறந்த மருந்து.
தினமும் தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குடித்து வந்தால் உங்கள் சருமத்தை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். இந்த ஆப்பிள் சிடர் வினிகர் உங்கள் சருமத்திற்கு ஒரு கவசம் போன்றது. இது உங்கள் சருமத்தை சமநிலையில் வைத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. வறண்ட சருமம் மற்றும் அரிக்கும் தோலழற்சியை குணமாக்க பெரிதும் உதவுகிறது. குளிக்கும் தண்ணீரில் கூட 2 மூடி ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து குளித்து வரலாம். இது சருமத்தை மென்மையாகவும் பாக்டிரியாக்களில் இருந்தும் பாதுகாக்கும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து குடித்து வரலாம். இது உங்களை நோய்வாய்ப்படுத்தும் கெட்ட கிருமிகளைய அழிக்க உதவுகிறது. இது அவர்களின் மாதவிடாய் ஒழுங்காகவும் சீராகவும் இருக்க உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இரத்தம் மிகவும் கெட்டியாகவும், தடிமனாகவும் மாறுவதை ஆப்பிள் சிடர் வினிகர் தடுக்கிறது. ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள பொட்டாசியம் மற்றும் கால்சியம் சத்து மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குணமாக்கும்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]