கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் கிர்ணி பழத்தை ஜீஸ் போட்டு குடிக்கும் போது பலரும் அதன் விதைகளை நீக்கி விடுகின்றனர். ஆனால் அதன் விதைகளில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. கிர்ணி பழத்தின் விதைகளை புரதங்களின் களஞ்சியம் எனக் குறிப்பிடலாம். இந்த விதைகள் உடலில் திசுக்களின் வளர்ச்சி மற்றும் அதன் பழுதுபார்ப்புக்கு முக்கியமானது.
கிர்ணிபழம் விதைகளில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஃபோலேட் உள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. கிர்ணி பழம் விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நீரிழிவு, இதய நோய், உடல் பருமன் மற்றும் புற்றுநோயின் உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. கிர்ணி பழத்தில் விதையில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இது உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து மாரடைப்பு அபாயத்தை தடுக்கிறது.
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் தேவையற்ற பசியை கட்டுப்படுத்தி கலோரி உட்கொள்ளலை குறைக்கிறது. எனவே உடல் எடையைக் குறைக்க மற்றும் நிர்வகிக்க விரும்புவோர் இந்த பழத்தை சாப்பிடலாம். கிர்ணி விதையில் செரிமானத்தை எளிதாக்கும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தருகிறது.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த வைட்டமின் சி கிர்ணி பழத்தில் இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுகிறது. ஜலதோஷம், இருமலை குணப்படுத்துவது மட்டுமின்றி பிற பருவகால நோய்களையும் எதிர்த்துப் போராடுகிறது.
கிர்ணிபழம் விதைகள் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் நிரம்பியுள்ளன. இவை உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பதில் அதிசயங்களை நிகழ்ன்றன. கிர்ணிபழம் விதைகளில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிக அளவில் இருக்கின்றன. இவை எலும்புகளை வலுவாக்கும் மற்றும் எலும்பு முறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைத் தடுக்கும்.
வைட்டமின் ஈ, சி போன்ற் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிர்ணி விதைகள் நமது சருமத்தை பாதுகாகத்து, சரும செல்களை புத்துயிர் பெறச் செய்யும். ஏராளமான புரதச் சத்து கொண்ட கிர்ணிபழ விதைகள் மயிர்க்கால்களை வலுப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. அதே சமயம் வைட்டமின் ஏ மற்றும் சி உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதன் நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் இந்த விதைகள் கண் பார்வை மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தை ஊக்குவிக்கின்றன.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]