herzindagi
dry fig health benefits

Dry fig: உலர் அத்திப்பழத்தில் இத்தனை மருத்துவ பயன்களா?

<p style="text-align: justify;">அத்திப்பழத்தின் சுவையும் அதன் மருத்துவ குணங்களும் ஏராளம். அது என்ன பயன்கள் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.&nbsp;&nbsp;
Editorial
Updated:- 2024-04-18, 12:19 IST

உலரவைத்த அத்திபழத்தை சாப்பிடுவது நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அத்திப்பழத்தை உலரவைத்து அதை ஒரு வட்டமான வடிவில், வைக்கோலில் மாலை வடிவில் கோர்த்து, சில கடைகளில் விற்கப்படும். இன்னும் சிலருக்கு இது உலர் அத்திப்பழம் என்றும், இந்த பழத்தை சாப்பிடுவார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கும். இந்த உலர் அத்திப்பழத்தின் சுவையும், மருத்துவ பயனும் ஏராளம் என்று கூறப்படுகிறது. உலர் அத்திப்பழத்தின் மருத்துவ பயனை தெரிந்து கொண்டால் உடனே இதை வாங்கி உண்ண வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வந்துவிடும். இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும், இது நம் உடலுக்கு மருத்துவ பலன்களும் அதிகமாக தரும். அருகில் உள்ள நாட்டுமருந்து கடை அல்லது டிரைஃபுட் பொருட்கள் விற்கும் கடைகளில் இந்த உலர் அத்திப்பழம் கிடைக்கும். இந்த உலர் அத்திப்பழத்தின் மருத்துவ பயனை குறித்து பார்ப்போம்.

அத்திப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் இ, கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால் இந்த உலர் அத்திப்பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடலாம். இது உங்கள் உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் தருகிறது. தினமும் 1 அல்லது 2 அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 

மேலும் படிக்க: பலாப்பழத்தில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

இதயத்திற்கு ஆரோக்கியம்:

அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நம் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. இதன் மூலம் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராகும். மேலும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒன்று அல்லது இரண்டு அத்திப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.

dry fig for heart health

புற்றுநோயை தடுக்க உதவும்:

இந்த உலர் அத்திப்பழத்தில் புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளதால் நம் உடலில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. நம் உடலின் ஆரோக்கியத்தையும் அத்திப்பழம் மேம்படுத்துகிறது.

எலும்புகள் வலுவாகும்:

தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள எலும்புகள் வலுவடையும். ஒரு அத்திப்பழத்தில் சுமார் 3% கால்சியம் உள்ளது. நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் அளவை இந்த ஒரு அத்திப்பழம் கொடுத்து விடுகிறது. மேலும் இதனால் உங்கள் எலும்பு தேய்மானம் ஏற்படாமலும் மூட்டு வலி வராமலும் தடுக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

எடை குறைக்கலாம்:

ஒரு உலர் அத்திப்பழத்தில் 47 கலோரிகள் மட்டுமே உள்ளது. இந்த பழத்தை உட்கொள்வதன் மூலம் 0.2 கிராம் கொழுப்பு சத்துதான் நம் உடலுக்கு போய் சேரும். இதனால் நம் உடல் எடை எளிதில் குறைந்து பல பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் இந்த உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

செரிமானத்தை அதிகரிக்கும்:

ஒரு நாளைக்கு மூன்று அத்திப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் 5 கிராம் அளவிலான நார்சத்து நம் உடலுக்கு கிடைக்கும். இது உங்கள் உணவு செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். 

ரத்த அழுத்தத்தை குறைக்கும்:

அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது. இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். 

reduce sugar levels

சர்க்கரை நோய்க்கு மருந்து: 

அத்திப்பழத்தில் அடங்கி இருக்கும் நார்ச்சத்தினால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை தாராளமாக சாப்பிடலாம். இதை எந்த அளவிற்கு சாப்பிட்டு வரவேண்டும் என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பின்பு இந்த பழக்கத்தை சாப்பிட தொடங்க வேண்டும்.

மேலும் படிக்க: பீட்ரூட்டில் கொட்டிக் கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

ரத்த சோகையை தடுக்கும்:

ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தி ரத்தத்தின் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுகிறது. ரத்தசோகை வராமல் தடுப்பதற்கு இந்த அத்திப்பழம் பெரிதும் உதவியாக உள்ளது.

 

Image source: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]