கத்திரிக்காயின் மகத்துவதை அறியாத காரணத்தினால் தமிழகத்தில் அதன் சாகுபடி குறைந்துவிட்டது என்று கூட சொல்லலாம். முன்பெல்லாம் வீடுகள், ஹோட்டல்களில் கத்திரிக்காய் சாம்பார் வாரத்திற்கு ஒருமுறையாவது தயாரிக்கப்படும். குழந்தைகள் இதை ஒதுக்கிய காரணத்தால் பெற்றோரும் இதை சமைக்க தவறிவிட்டனர். கத்திரிக்காய் கூட்டு, பிரியாணிக்கு கத்திரிக்காய் கிரேவி என சுவைத்த காலம் மாறி மார்க்கெட்டில் கத்திரிக்காய் காண்பதே அரிதாகிவிட்டது. முட்டை சைஸில் உள்ள இந்த காய் சாப்பாட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவாகும். இதில் உள்ள வைட்டமின்களும், மினரல்களும் உடலுக்கு தேவையானவை. கத்திரிக்காயின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொண்டால் இனி எப்போதும் அதை தவிர்க்க மாட்டீர்கள்.
100 கிராம் கத்திரிக்காயில் 5.88 கிராம் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து 3 கிராம், இயற்கை சர்க்கரை 3.53 கிராம், கொழுப்பு 0.18 கிராம், புரதம் 0.98 கிராம், வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, பி9, சி, ஈ, கே என அனைத்தும் மில்லி கிராம் அளவில் உள்ளன. இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், மாங்கனீஸ் ஆகிய சத்துகளும் இதில் அடக்கம்.
கத்திரிக்காயில் உள்ள அனைத்து வைட்டமின்களும், மினரல்களும் நம் உடலுக்குத் தேவையானதாகும். உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கு கத்திரிக்காய் உதவுகிறது. கத்திரிக்காயை தொடர்ந்து உட்கொண்டால் உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தவிர்க்கலாம்,
இந்தியாவில் சுமார் 8 கோடி பேர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது கவலைக்குரிய விஷயமாகும். உணவு பழக்கத்தில் நார்ச்சத்து நிறைந்த கத்திரிக்காயை சேர்த்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம். கத்திரிக்காயில் உள்ள நார்ச்சத்து நம் உடலை சர்க்கரையை எளிதில் உறிஞ்ச விடாது. மேலும் இரத்த சர்க்கரை அளவுகளையும் கட்டுப்படுத்தும்.
ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகிக்க விரும்பும் நபராக நீங்கள் இருந்தால் அதற்கு கத்திரிக்காய் பெரிதும் உதவும். இது குறைந்த கலோரி மற்றும் அதிகளவு நார்ச்சத்து கொண்டது. எடையை இழக்க விரும்புவோர் கட்டாயம் கத்திரிக்காய் சாப்பிடுங்கள். உணவில் கத்திரிக்காய் சேர்த்துக் கொண்டால் அது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கும்.
குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வலுவான எலும்புகள் இருந்தால் மட்டுமே எந்தவொரு வேலையையும் செய்ய முடியும். வலுவான எலும்புகள் குழந்தையின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும். அப்போது தான் வயதான காலத்தில் பல்வேறு பிரச்னைகளை தவிர்க்க முடியும். கத்திரிக்காய் சாப்பிட்டு வந்தால் எலும்பின் அடர்த்தி அதிகரிக்கும். கத்திரிக்காயில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும்.
நீண்ட நேரம் மின்சாதன பொருட்களைப் பயன்படுத்துவது கண் பார்வை குறைபாட்டிற்கு வழிவகுக்கும். கத்திரிக்காய் சாப்பிட்டால் கண் பார்வை பாதிப்பின் வேகத்தை குறைக்கலாம். கண் பார்வையும் மேம்படும். கண்களில் உள்ள திசுக்களும் கத்திரிக்காய் பலன் தரும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]