சமீபத்தில் இணையத்தில் ட்ரெண்டாகி வரும் இந்த ஏபிசி ஜூஸ் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அளிக்க உதவுகிறது. ஆப்பிள் பீட்ரூட் கேரட் இதனை சேர்த்து செய்யப்படும் ஒரு ஜூஸ் தான் இந்த ஏபிசி ஜூஸ். இதில் வைட்டமின்கள் மற்றும் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஜூஸை தினசரி குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இந்த ஏபிசி ஜூஸ் குடித்து வந்தால் நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது உங்கள் சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும். தினசரி ஏபிசி ஜூஸ் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தினசரி உங்கள் உணவில் ஒரு கிளாஸ் ஏபிசி ஜூஸ் சேர்த்து குடித்து வந்தால் உங்கள் சருமம் சீக்கிரம் முதிர்ச்சி அடைவதை தடுக்க உதவுகிறது. மேலும் இது உங்கள் சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் மாற்றும் ஆற்றல் கொண்டது.
இந்த ஏ பி சி ஜூஸில் நம் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நம் தலை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் குடிப்பதினால் தலைமுடி உதிர்வு நாளடைவில் குணமாகும். இதனால் வீட்டில் இருந்தபடியே ஆரோக்கியமான நீண்ட வலுவான கூந்தலை பராமரிக்க முடியும்.
கோடை காலத்தில் உங்கள் சருமம் வறட்சியாக மாறிவிடுகிறது. தினசரி ஏபிசி ஜூஸ் குடித்து வந்தால் உங்கள் சருமத்தில் நீர்ச்சத்தை பராமரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. கோடை காலத்தில் மட்டுமின்றி குளிர் காலத்திலும் நம் சருமம் வறண்டு போக வாய்ப்புகள் அதிகம். தினசரி ஒரு கிளாஸ் ஏபிசி ஜூஸ் குடித்து வருவதினால் சரும ஆரோக்கியம் மேம்படும். ஏனென்றால் ஆப்பிளில் அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இது நம் சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாக்க உதவுகிறது.
நம் சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பீட்ரூட் ஒரு சிறந்த உணவு பொருள். இது நம் சருமத்தில் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. தினசரி ஒரு கிளாஸ் ஏபிசி ஜூஸ் குடித்து வந்தால் முகப்பருக்களை எதிர்த்து போராட பெரிதும் உதவுகிறது.
நம் சருமம் பொலிவாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இந்த கொலஜென். ஆப்பிள் மற்றும் கேரட்டில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்து இந்த கொலஜென் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் இயற்கையான முறையில் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்கும்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]