Cashew Milk Benefits: முந்திரி பால் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

நம் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை தருவதற்கு முந்திரி பால் உதவுகிறது.

cashew milk for skin

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அதிகம் பிடித்த ஒரு பருப்பு வகை இந்த முந்திரி பருப்பு என்று கூறலாம். சாலட் வகைகள், ஐஸ்கிரீம், பொங்கல், கேசரி, பாயாசம், லட்டு போன்ற பல உணவு வகைகளிலும் நாம் முந்திரிப் பருப்பை சேர்ப்பது வழக்கம். நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் இந்த முந்திரி பருப்பு கொண்டுள்ளது. அதேபோல முந்திரி பாலில் உள்ள ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம்.

இந்த முந்திரி பாலில் ஒமேகா 6 உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் ஆரோக்கியமான சருமத்திற்கு பெரிதும் உதவும். அது மட்டும் இல்லாமல் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைக்கவும் இந்த முந்திரி பால் உதவுகிறது. முந்திரி பாலை குடித்து வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இரத்த அழுத்தம் சீராகும்:

முந்திரி பாலில் உள்ள மெக்னீசியம் சத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். இதில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தம் சீராக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. நம் உடலில் ரத்த அழுத்தம் சீராக இருக்கும் பொழுது இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறையும்.

இதய ஆரோக்கியம்:

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு சிறந்த உணவு இந்த முந்திரி பால். முந்திரி பாலில் ஆலிவ் எண்ணெயில் உள்ளது போல ஒலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த ஒலிக் அமிலம் இதய நோய்கள் ஏற்படும் காரணமான ட்ரைகிளிசரைடுகளின் அளவை குறைக்க உதவும். இதனால் முந்திரி பாலினை அளவோடு சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

cashew milk

வழுவான எலும்பு:

முந்திரி பாலில் உள்ள மெக்னீசியம் சத்து மற்றும் பாஸ்பரஸ் சத்து நம் உடலில் உள்ள எலும்புகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இந்த முந்திரி பாலில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் நம் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது.

அஜீரணக் கோளாறு குணமாகும்:

தயிரை விட இந்த முந்திரி பால் எளிதில் செரிமானம் ஆகும் ஏனென்றால் பாலில் உள்ள லாக்டோஸ் மற்றும் கேசன் புரதச்சத்து இந்த முந்திரி பாலில் இல்லை. எனவே உணவு செரிமானத்திற்கு இந்த முந்திரி பால் அதிக அளவு உதவுகிறது.

மன அழுத்தம் குறையும்:

மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு சிறந்த மருந்து முந்திரி பால். இந்த முந்திரி பாலில் உள்ள அமினோ அமிலங்கள் நம் உடலில் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை குறைக்க உதவுகிறது. இதனால் உங்களுக்கு மன அழுத்தம் குறைந்து மன அமைதி ஏற்படும்.

சரும ஆரோக்கியம்:

நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த முந்திரி பாலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் நம் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குவதன் மூலம் தோல் எரிச்சல், அலர்ஜி, முன்கூட்டிய வயது முதிர்ச்சி போன்றவைகளை தடுக்க உதவுகிறது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP