நம் அன்றாட உணவுப் பட்டியலில் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும், என்னென்ன உணவுகள் சாப்பிடக் கூடாது என்பதைத் தெரிந்து சாப்பிடுபவரக்ள் சற்று குறைவு தான். நமது உடலின் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் புட் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து ஆரோக்கியமான புரதச் சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் அன்றாட உணவுப் பழக்கங்களில் சில தவறுகளை செய்து வருகிறோம்.
அன்றாட வாழ்க்கையில் எந்தெந்த உணவுகளை அதிகளவு சாப்பிடக் கூடாது என்பதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மாலை வேளைகளில் உண்ணும் நொறுக்குத் தீனிகளில் அதிகம் கவனம் தேவை. மாலை வேளைகளில் பசி எடுக்கும் போது சமோசா, சாக்லேட் கேக், பீட்ஸா, பர்கர் என்று சாப்பிட தோணும். இந்த மாலை வேளையில் பசி நம்மை அதிகம் வாட்டும் போது நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது பற்றி நம்மில் பலரும் அதிகம் கவனம் கொள்வதில்லை. அதே போல எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது பற்றியும் கவலைப் படுவதே இல்லை. இந்த சமயத்தில் நாம் சாப்பிடும் நொறுக்குத் தீனியில் கவனமாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், சாலட்கள், உலர் பழங்கள், நட்ஸ் வகைகள், பயறு வகைகள் போன்றவைகளை ஒரு தட்டில் எடுத்து மாலை ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடலாம். தட்டில் எடுத்து சாப்பிடும் போது தான் எவ்வளவு சாப்பிட்டோம் என்ற அளவு தெரியும்.
அதே போல தினசரி உணவிற்கு பிறகு நம்மில் பலரும் இனிப்புகள் சாப்பிடுவது வழக்கம். கல்யாண வீடுகளில் கூட பாயசம் போன்ற இனிப்பு வகைகளை இலையில் வைப்பது பழக்கம். இது நம் உணவுமுறை கலாச்சாரமாகவே மாறிவிட்டது என்று கூறலாம். இப்படி அன்றாடம் உணவருந்திய பின், நாம் நாம் இனிப்புகளை சாப்பிடும் போது நீங்கள் சாப்பிட்ட இனிப்பு பண்டங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். தினமும் இனிப்பு வகை உணவுகள் உண்ணுவதை தவிர்த்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்கள் அல்லது ஏதேனும் விஷேச தினங்களில் மட்டும் உணவுக்கு பின் உங்களுக்கு பிடித்த இனிப்பு வகைகளை சாப்பிடலாம்.
மேலும் படிக்க: எலும்புகளை வலுப்படுத்த வேண்டுமா? பச்சை பீன்ஸ் சாப்பிடுங்க!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காய்கறி உருளைக்கிழங்கு. உருளைக் கிழங்கு பிரை, உருளைக் கிழங்கு சிப்ஸ், சமோசா என பல விதமாக நம் உணவில் இந்த உருளைக் கிழங்கு இடம்பிடித்து விடுகிறது. நாமும் அவை இருந்தால் தான் சாப்பிடுகிறோம். இந்த உருளைக் கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்ததாக கூறப்படுகிறது. நம்மில் பலரும் உருளைக் கிழங்கு அல்லது உருளைக் கிழங்கு சிப்ஸ் இல்லாமல் உணவு உண்பதில்லை. இதனால் வாய்வுத் தொல்லை, அஜுரணக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு நாளடைவில் உங்கள் உடல் எடையும் அதிகரித்து விடும்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]