நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உணவு வழியே உட்கொள்ளும் போது நம் எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். எலும்புகளை வலுவாக வைத்திருக்க உணவுகளை நாம் தேடி போக வேண்டிய அவசியமே இல்லை. நாம் தினசரி எடுக்க வேண்டிய உணவுகளில் எலும்பு ஆரோக்கியத்திற்கு மற்றும் அதனை வலுப்படுத்தும் உணவுகளில் தனி கவனம் செலுத்தினால் போதும். நாம் நம் எலும்புகளை வலுப்படுத்த என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதைக் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
அனைத்து விதமான பழங்களிலும் காய்கறிகளிலும் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து உள்ளது. இந்த பொட்டாசியம் சத்து நம் உடலில் உள்ள எலும்புகள் அடர்த்தியாவதை உறுதிப்படுத்துகிறது. ஆரஞ்சு பழம், பப்பாளி பழம், அன்னாசி பழம், அத்திப்பழம், கிவி போன்ற பழங்களில் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. நம் எலும்புகள் வலுவடைய கால்சியம் சத்து மிகவும் அவசியம்.
நம் உடலில் உள்ள எலும்புகள் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவக்கூடிய ஒரு உணவு பொருள் மஞ்சள். நம் அன்றாடம் வீட்டில் சமைக்கும் எல்லா உணவுப் பொருட்களில் மஞ்சள் சேர்ப்பது வழக்கம். இது மூட்டு வலியை சரி செய்ய உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து ஞாபக சக்தியை மேம்படுத்த மஞ்சள் பெரிதும் உதவுகிறது. மஞ்சளை ஒரு கிளாஸ் பாலில் கலந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நம் எலும்புகள் வலுவாகும். இதன் கூடவே மிளகு பொடியும், சிறிதளவு தேனும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் மேம்படும்.
சைவ சிக்கன் என்று அழைக்கப்படும் இந்த சோயாபீன்ஸில் பிளேவனாய்டுகள் அதிகம் உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி வராமல் தடுக்கவும் இந்த சோயா பீன்ஸ் உதவுகிறது. சோயா பீன்ஸ், சோயா பால், டோஃபு போன்ற சோயா சார்ந்த அனைத்து உணவு பொருட்களிலும் இந்த சத்து உள்ளது. இது நம் எலும்புகள் வலுவாக உதவி செய்யும்.
முருங்கைக் கீரையில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. இந்த இரண்டுமே நம் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது என்று கூறலாம். எலும்புகள் வலுவடைய தினசரி இந்த முருங்கை ஜூஸ் சாப்பிட்டு வரலாம். இதில் உள்ள புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் அளிக்க உதவுகிறது.
இந்த மாதுளை நம் எலும்புகள் பலவீனம் ஆகாமல் தடுத்து எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இதனை ஜூஸ் ஆகவும் உட்கொள்ளலாம். இல்லை என்றால் தினமும் ஒரு கப் மாதுளம் விதைகளை சாப்பிட்டு வரலாம்.
நம் உடலில் ஏற்படும் காயத்திற்கு ஒரு சிறந்த மருந்து இந்த கரிசலாங்கண்ணி. தினசரி நம் உணவில் இதை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். எள்ளுடன் சேர்த்து கரிசலாங்கண்ணியை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள எலும்புகள் வலுவாகும்.
உடைந்த எலும்புகளை சரிசெய்ய ஆயுர்வேத மருத்துவத்தில் பிரண்டை தான் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆஸ்டியோபோராசிஸ் (எலும்பு முறிவு) என்ற பிரச்சனையை குணப்படுத்த மிக முக்கியமான மருந்துகளில் பிரண்டையும் ஒன்று. இதில் அதிக அளவு கால்சியம் உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு பிரண்டை நல்ல மருந்து என்று கூறலாம். இந்த பிரண்டையை துவையலாக்கி சாப்பிடலாம் அல்லது மஞ்சள் உப்பு கலந்து பொடியாக்கியும் சாப்பிட்டு வரலாம். மேலும் எலும்புகள் வலுவடைய இந்த பிரண்டை ஜூஸில் தேன் கலந்து குடித்து வரலாம்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]