தினசரி காலை மாலை இரவு என்று மூன்று வேளைகளில் நாம் உணவு உட்கொள்கிறோம். இது தவிர நமக்கு பசிக்கும் போதெல்லாம் டீ, காபி, ஸ்னாக்ஸ் போன்ற உணவுகளையும் சாப்பிடுகிறோம். நேரத்திற்கு சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ அதே போல நம் உடலில் தங்கும் உணவு நச்சுக்களை வெளியேற்றுவதும் முக்கியம் தான். இதை டீடாக்ஸ் என்று கூறுவார்கள். அதாவது உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றும் முறை.
சில உணவு பொருட்கள் சரியாக ஜீரணம் ஆகாத நிலையில் அது நம் உடலில் நச்சுக்களாக தங்கி விடுகிறது. இது போல நம் உடலில் நமக்கே தெரியாமல் பல நச்சுக்கள் சேர்ந்து விடுகிறது. நாளடைவில் இது குடல் வீக்கம், வயிற்று கோளாறு பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்ற நோய்கள் ஏற்பட காரணம் ஆக அமைகிறது. குறைந்தது இரண்டு வாரம் ஒரு முறை ஆவது உடலை நாம் டீடாக்ஸ் செய்ய வேண்டும். குறிப்பாக வயிற்றை டீடாக்ஸ் செய்வது அவசியம். நம் வயிற்றில் உள்ள நச்சுக்களை சில ஆரோக்கிய ஜூஸ்களை வைத்து வெளியேற்றுவது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த பழம் ஆப்பிள். இந்த பழம் எல்லா சீசனிலும் கிடைக்கும், ஆனால் சற்று விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிளில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். ஆப்பிளில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் மலசிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும். எனவே வாரம் ஒருமுறை ஆவது ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் வயிறு சுற்றமாகி மன நிலை ஆரோக்கியமும் மேம்படும்.
பச்சை நிறத்தில் உள்ள எல்லா காய்கறிகளையும் இந்த ஜூஸில் சேர்க்கலாம். உதாரணமாக ப்ராக்கோலி, கீரை, பாகற்காய், கற்றாழை போன்ற பச்சை காய்கறிகளை ஜூஸ் செய்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இது நம் குடலில் உள்ள அழுக்குகளையும் சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது. பாகற்காய் ஜூஸ் பிடிக்காதவர்கள், ப்ராக்கோலி அல்லது கீரை ஜூஸ் குடித்து வரலாம்.
மேலும் படிக்க: உடல் எடை குறையணுமா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
இது பார்ப்பதற்கு மிக சிறிய பழமாக இருந்தாலும், இதன் மருத்துவ குணங்கள் ரொம்பவே அதிகம் என்று கூறலாம். நீங்கள் வயிற்றை சுத்தம் செய்ய எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம். இந்த எலுமிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் சி னாய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஒரு சிலருக்கு எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சளி பிடிக்கும் என்பதால், இவர்கள் வெறும் வயிற்றில் சுடுதண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்து வரலாம். இந்த எலுமிச்சை சாறு குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வயிற்றை சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]