ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க தேங்காய் போதும்; எப்படி தெரியுமா?

தேங்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் நிறைய நேரத்திற்குப் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் தேவையில்லாத உணவுகள் சாப்பிடுவதையும், அதே சமயத்தில் அதிகமாக உட்கொள்வதையும் தடுக்க முடியும்.
image

நம்மில் பலரும் சந்திக்கும் உடல் நல பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது உடல் பருமன். அதிகரித்த எடையால் உடல் அமைப்பு மட்டும் மாறுவதில்லை. அதனுடன் பல உடல் நல பிரச்சனைகளையும் வாங்க நேரிடுகிறது. இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதற்காக ஜிம்மிற்குச் செல்வது, உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வருவது முதல் வாக்கிங், ஸ்கிப்பிங் போன்ற பல பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். இந்த வரிசையில் எவ்வித உடல் உழைப்பும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும் என்றால், உங்களது உணவில் தேங்காயைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அது எப்படி தேங்காய் உடல் எடையைக் குறைக்க உதவும்? எப்படி அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற தகவல்கள் இங்கே.

coconut

உடல் எடைக் குறைப்பில் தேங்காய்:

  • தேங்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதை சாப்பிடும் போது நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை நமக்கு ஏற்படுத்தாது. இதனால் தேவையில்லாத ஸ்நாக்ஸ் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவோம்.
  • எடையைக் குறைக்க விரும்புவோர் தேங்காய் துண்டுகளை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது. ஒருவேளை தேங்காயை அப்படியே சாப்பிடுவது பிடிக்கவில்லையென்றால் ஸ்மூத்தி, தேங்காய் பர்பி போன்ற பல ரெசிபிகள் செய்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க:இதய நோய் பாதிப்பு வராமல் தடுக்க இந்த பழங்களை டயட்டில் எடுத்துக்கோங்க

  • தேங்காய் பால் அல்லது தேங்காய் துண்டுகளை காலையில் சாப்பிடும் போது வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். உடலில் வளர்சிதை மாற்றம் சீராக இருந்தால் செரிமானம் தாமதம் ஆகாது. மலச்சிக்கல் போன்ற பிரச்சனையைத் தவிர்க்க முடியும். இதில் குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளதால், தேவையில்லாத கொழுப்புகள் உடலில் சேர விடாமல் தடுக்கிறது.

coconut for weight loss

  • அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள் கட்டாயம், தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீர் குடிக்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்துக் குடிக்கும் போது, உடலுக்கு ஆற்றலோடு கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுக்க முடியும்.
  • தேங்காயில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகள் இருந்தபோதிலும், வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீர் குடிக்க வேண்டும். இவை வயிறு நீண்ட நேரத்திற்கு நிரம்பியுள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்தும். எனவே தேங்காய் தண்ணீரை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை குடிக்கும் போது எடை வேகமாக குறைகிறது.

மேலும் படிக்க:உணவு ஜீரணம் ஆகவில்லையா? இந்த 5 பழங்களை சேர்த்து சாப்பிட்டால் போதும்

தேங்காய் சாப்பிடுவதால் உடல் எடை குறைவது மட்டுமல்ல, கல்லீரல் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் உள்ள லாடிக் அமிலம் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. இனி ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், தேங்காயைக் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்ய மறந்துவிடாதீர்கள்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP