Clove Benefits : கிராம்பு சாப்பிட்டால் இத்தனை நோய்களை குணப்படுத்த முடியுமா?

கிராம்பு உடலுக்கு அதிக நன்மைகளை தரும். அஜீரணம் முதல் புற்றுநோய் வரை கிராம்பு தரும் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் படித்தறிந்து பயன்பெறுங்கள்...

 
clove benefits

கிராம்பு அல்லது இலவங்கம் என்று அழைக்கப்படும் இந்த மசாலா பொருள், உணவுக்கு நல்ல சுவையையும் மணத்தையும் கொடுக்கிறது. இதனுடன் கிராம்பில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.

இதன் மருத்துவ குணம் காரணமாக ஆயுர்வேத மருத்துவத்திலும் கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. கிராம்பை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பல வழிகள் உண்டு. இதை தண்ணீருடன் கொதிக்க வைத்து டீ ஆகவும் குடிக்கலாம் அல்லது காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கிராம்பை மென்றும் சாப்பிடலாம். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும். அவை என்ன என்பதை அறிய பதிவை தொடர்ந்து படிக்கவும்.

1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கிராம்பில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதன் மூலம் நோய் அல்லது தொற்றுகளிடமிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ள முடியும். நோயின்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் காலையில் 2 கிராம்புகளை மென்று சாப்பிடலாம்.

2. செரிமானம் மேம்படும்

clove for digestion

செரிமான மண்டலம் சீராக இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்து நிறைந்த கிராம்புகள் உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது. தினமும் காலையில் கிராம்பு சாப்பிடுவது செரிமான செயல்முறையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. கிராம்பு செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது.

3. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்

உடலில் உள்ள நச்சுக்களை வளர்ச்சிதை மாற்றம் செய்து அவற்றை வெளியேற்றுவதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராம்பில் உள்ள யூஜெனால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே உங்கள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த தினமும் கிராம்பு சாப்பிடலாம்.

4. பல் வலியிலிருந்து நிவாரணம்

clove for teeth

பொதுவாக பல் வலியை போக்க கிராம்பு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் பல் வலி உள்ள இடத்தில் ஒரு கிராம்பை வைத்து, அதன் சாறு பாதிக்கப்பட்ட இடத்தின் மீது படும் படி மெதுவாக கடித்து பொறுமையாக மென்று சாப்பிடலாம். கிராம்பில் உள்ள பண்புகள் வலியால் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க உதவுகின்றன. பல் வலியை குறைப்பதில் கிராம்பு மிகச்சிறந்த பலன்களை கொடுக்கும்.

5. தலைவலியை தடுக்கும்

கிராம்பில் யூஜெனோல் உள்ளது, இது வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. கிராம்பில் காணப்படும் இத்தகைய நற்பண்புகள் தலைவலியில் இருந்து விடுபட உதவுகின்றன. கிராம்பை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது பாலில் சிறிது கிராம்பு பொடி கலந்தும் குடிக்கலாம். தலைவலி இருக்கும் சமயத்தில் நெற்றியின் மீது கிராம்பு எண்ணெயையும் தேய்க்கலாம், இதுவும் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற உதவும்.

clove for headache

6. எலும்புகளுக்கு நல்லது

கிராம்புகளில் ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனால் உள்ளன, இவை எலும்பு மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்புகளின் அடர்த்தியை பராமரிக்கவும் உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் மஞ்சள் நீர் குடிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றங்களா?

7. வாய்வழி ஆரோக்கியம்

தினமும் இரண்டு கிராம்பு சாப்பிடுவது வாயில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது. இதனால் ஈறுகளின் ஆரோக்கியமும் மேம்படும். இது ஒட்டுமொத்த வாய்வழி ஆரோக்கியத்திற்கும் நல்லது. நீங்கள் விரும்பினால் கிராம்பு மற்றும் துளசியை கொண்டு வீட்டிலேயே மவுத்வாஷ் தயார் செய்து பயன்படுத்தலாம்.

8. இரத்த சர்க்கரை சீராக்கும்

சர்க்கரை நோயாளிகள் கிராம்பை தங்கள் அன்றாட உணவு சேர்த்துக் கொள்ள வேண்டும். கிராம்பு இரத்த சர்க்கரையின் அளவை சீராக்கி, அதை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

9. புற்றுநோயை தடுக்கும்

கிராம்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலை நுரையீரல் கருப்பை மற்றும் மார்பகப் புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள பண்புகள் கட்டி அல்லது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கின்றன.

clove for lungs

10. சுவாச ஆரோக்கியம்

கிராம்பு சுவாசக் குழாயை தணித்து, நுரையீரலில் பாக்டீரியா நுழைவதைத் தடுக்கிறது. இது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மிகவும் நல்லது.

11. மன அழுத்தத்தை குறைக்கும்

கிராம்பில் மன அழுத்த எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் கிராம்பை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், நீங்கள் நிதானமாகவும் அமைதியாகவும் உணர்வீர்கள்.

12. சருமம் மற்றும் தலைமுடி

கிராம்புகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தினமும் கிராம்பு சாப்பிட்டு வந்தால் முகப்பருவை தடுக்கலாம். கிராம்பு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP