தர்பூசணி மிக பிரபலமான கோடைக் கால பழம் ஆகும். உலகளவில் தர்பூசணி பரவலாக உபயோகிக்கபடுகின்றன. ஆனால் தர்பூசணி பழத்தில் உள்ள சாறு நிறைந்த சதைப் பகுதியை மட்டும் உட்கொண்டு, அதில் ஆங்காங்கே காணப்படுகின்ற விதைகளை அப்புறப்படுத்தும் மக்கள் அதிகம். ஆனாலும் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தர்பூசணி பழத்தின் விதைகளின் முக்கியத்துவம் உணர்ந்து அதனை தினசரி உணவில் சேர்த்து பயன்படுத்துகின்றனர். ஆசியாவில் உள்ள பல நாடுகள் தர்பூசணி விதைகளை சேகரித்து, தர்பூசணி விதை சூப், தர்பூசணி விதை எண்ணெய், தர்பூசணி விதை தேநீர், தர்பூசணி விதைச்சாறு என உணவு பொருட்களாக உருவாக்கி பயன்படுத்துகின்றனர். அந்தளவுக்கு, தர்பூசணி விதையில் என்ன சிறப்பு உள்ளது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
தர்பூசணி தேவையான விதையில் நம் உடலுக்குத் கொழுப்பு, அத்தியாவசிய புரதங்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. அது போலவே, இந்த விதைகளில் தயா விதைகளில் தயாமின், நியாசின் போன்ற வைட்டமின்களும், ஃபோலட், மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் செப்பு போன்ற தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. 100 கிராம் தர்பூசணி விதை 600 கிராம் கலோரியை வழங்குகிறது. வறுக்கப்பட்ட தர்பூசணியின் விதைகள் சிற்றுண்டியாக சில நாடுகளில் பயன்படுத்துகின்றன. இந்த விதைகளிலிருந்து பெறப்படுகின்ற எண்ணெய், முடி மற்றும் தோலின் பளபளப்புக்கு பெரிதும் உதவுகின்றன.
மேலும் படிக்க: சோயா சங்க்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
நம் உடலுக்கு சில அமினோ அமிலங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் நம் உடலினால் தானாக அதனை உருவாக்க முடியாது. எனவே தர்பூசணி விதைகள் அர்ஜினைன், லைசின் போன்ற அத்தியாவசியமான அமினோ அமிலங்களை நம் உடலுக்கு வழங்குகிறது. 'அர்ஜினைன்' என்ற அமினோ அமிலம் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும், இதய செயல்பாட்டிற்கும் உதவியாக இருக்கிறது. அதுபோலவே இந்த விதைகள் டிரிப்டோன் மற்றும் குளூத்தமிக் அமிலங்களைக் கொண்டுள்ளன. 'லைசின்' என்ற அமிலம் உடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி கொலஜன் மற்றும் இணைப்புத் திசு வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் தர்பூசணி விதைகளில் அதிக அளவில் 'மெக்னீசியம்' காணப்படுகிறது. இது இதய செயல்பாடு, இரத்த அழுத்த பராமரிப்பு, வளர்சிதை மாற்ற செயல்முறை புரதத் தொகுப்பு போன்ற செயல்பாட்டிற்கு உதவுகிறது.
தர்பூசணி விதைகளில் "லைகோபீன்” நிறைந்துள்ளது. முகத்தின் பளபளப்பிற்கும் ஆண், பெண் இனப்பெருக்க மேம்பாட்டிற்கும் இந்த விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. தர்பூசணி விதைகள் அதிக அளவில் நிறைவுறா கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. இது தோலின் ஈரப்பதத்திற்கும் மினுமினுப்பிற்கும் நோய்களை தடுக்க வல்லதாகவும் உள்ளது.
தர்பூசணி விதைகளின் எண்ணெயில் 20 சதவிகிதம் நிறைவுற்ற கொழுப்பும், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும், பல நிறைவுறா கொழுப்பும் உள்ளடங்கியுள்ளது. உலர்ந்த தர்பூசணி விதைகளில் 50 கிராம கொழுப்பு நிறைந்துள்ளது. இந்த விதைகள் முக்கியமாக கலோரி மற்றும் ஆற்றலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
வயதான அறிகுறிகளை தடுக்கவும் தர்பூசணி விதைகள் பயன்படுகின்றன. இது தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக் உதவுகிறது. இந்த செயல்பாட்டிற்கு லைசின், அர்ஜினைன், புரிப்டோபன் மற்றும் குளூத்தமிக் அமிலங்கள் உதவுகின்றன.
புரத பற்றாக்குறை பிரச்சனை பல நோய்களுக்கு வழிவகுக்கின்றன. இதனை பெரும்பாலான உலகில் உள்ள ஏழை நாடுகளில் காண முடியும். ஆனால் தர்பூசணி விதைகள் கொண்டுள்ள புரதம் இந்த குறைபாடுகளை எதிர்த்து போராடுவதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வறுக்கப்பட்ட தர்பூசணி விதைகளில் காப்பர் நிறைந்துள்ளது. இது மெலனின் வளர்ச்சிக்கும், நிறத்திற்கும் வழிவகுக்கிறது. தர்பூசணி எண்ணெயில் அதிக அளவில் நன்மைகள் உள்ளன என்பதை புரிந்து கொண்ட ஆப்பிரிக்க மக்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]