நம் உடல் ஆரோக்கியத்தை மேம்மடுத்த உணவு பட்டியலில் மாதுளை ஜூஸ் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாதுளை ஜூஸ் அனைவராலும் விரும்பி சாப்பிட முடியும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இந்த மாதுளை பழங்கள் மற்றும் மாதுளை ஜூஸ் அனைத்து காலத்திலும் கிடைக்கும் ஒரு அற்புதமான பழம் என்று சொல்லலாம். இது பல நோய்களை குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் உதவி செய்யும்.
சமீபத்தில் மாதுளை பழங்கள் குறித்த ஒரு மருத்துவ ஆய்வில் மாதுளை ஜூஸ்ஸில் ஏராளமான ஊட்டசத்துகள் உள்ளது என்று கண்டறியப் பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் மாதுளை பழங்கள், க்ரீன் டீயை விட அதிக ஆரோக்கியமானதும் கூட. மாதுளை பழத்தில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க உதவுகிறது. மேலும் மாதுளை ஜூஸ் தயாரித்தவுடன் சாப்பிட வேண்டும். அப்போது தான் அதன் முழு நம் உடலுக்கு நன்மை கிடைக்கும். ஒரு சிலர் மாதுளை ஜூஸில் பால் சேர்த்து குடிப்பார்கள், இன்னும் சிலர் தண்ணீர் ஊற்றி குடிப்பார்கள். இந்த மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பெண்கள் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் பல வகையான புற்று நோய்கள் மற்றும் கட்டிகள், புரோஸ்டேட் புற்று நோய், மார்பக புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த மாதுளை பழங்கள் புற்று நோய் செல்கள் உற்பத்தியை முழுதாக முடக்கிவிடும் என்று கூறப்படுகிறது. பல்வேறு மருத்துவ ஆய்வுகளில் மாதுளை ஜூஸ் தொடர்ந்து குடித்து வந்தால் புற்று நோய் அபாயத்தில் இருந்து தப்பித்து விடலாம் என்று தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வயிற்றை சுத்தம் செய்ய இந்த ஜூஸ்களை ட்ரை பண்ணுங்க!
உங்கள் தினசரி உணவு முறையில் மாதுளை ஜூஸ் சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும். மாதுளை ஜூஸ் உங்கள் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு மாதுளை ஒரு சிறந்த மருந்து. இந்த மாதுளை ஜூஸ் சர்க்கரை நோயை எதிர்க்க உதவுகிறது. பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர் பழங்களை அதிகம் சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் மாதுளை ஜூஸ் குடித்தால் இது இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதன மூலம், டைப்-2 வகையான சர்க்கரை நோய் அறிகுறிகளை தடுக்கும் என்று கூறப்படுகிறது.
பெண்கள் மாதுளை ஜூஸ் தினமும் குடித்து வந்தால் சருமம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். அது மட்டும் இல்லாமல் உங்களை இளமையுடன் வைத்து, முதிர்ச்சி செயல்முறையைத் தாமதமாக்கும், சருமத்தில் உள்ள சுருக்கங்களை தடுப்பதோடு புதிய செல்களை உருவாக்கி, பல விதமான சரும தொற்றுகள் வராமல் தடுக்கும். மேலும் முகப்பருக்களை தடுக்கவும் மாதுளை ஜூஸ் பயன்படுகிறது.
நீங்கள் மாதுளை ஜூஸ் அதிகம் குடித்து வந்தால் தலைமுடியை ஆரோக்கிமாக வைத்துக்கொள்வதன் மூலம் நீளமான அடர்த்தியான தலைமுடி வளர செய்கிறது. தலைமுடியை வலிமையாக்க ஒரு சிறந்த மருந்து இந்த மாதுளை ஜூஸ். தலைமுடி உதிர்வு பிரச்சனைகள் இருந்தால் கூட தினசரி இந்த மாதுளை ஜூஸ் குடித்து வரலாம்.
தினசரி மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் பற்களை வலிமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மாதுளையில் உள்ள ஊட்டசத்துக்கள் பற்களில் ப்ளேக் உருவாக்கத்தை தடுக்க உதவுகிறது. இதனால் உங்கள் பற்கள் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]