40 வயது கடந்த பெண்கள் பலருக்கும் மூட்டு வலி வருவது வழக்கம். இதற்கு காரணம் அவர்களின் எலும்புகள் தேய்மானம் ஆக துவங்குகிறது. எலும்புகள் நமது உடலின் அடிப்படை கட்டமைப்பாகும். அவை வலிமையாக இருந்தால்தான் நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், வைட்டமின் டி, மக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அவசியம். இந்தக் கட்டுரையில், எலும்புகளை வலுப்படுத்த உதவும் சூப்பர் உணவுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பால் மற்றும் தயிர், பனீர், சீஸ் போன்ற பால் பொருட்கள் கால்சியத்தின் சிறந்த மூலங்கள். கால்சியம் சத்து எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும். வைட்டமின் டி சேர்ந்தால், கால்சியம் உடலில் நன்றாக உறிஞ்சப்படும். தினமும் ஒரு கப் பால் அல்லது தயிர் சாப்பிடுவது எலும்பு வலிமைக்கு உதவும்.
பாலக் கீரை, முருங்கைக்கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளில் கால்சியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் கே சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் கே, எலும்புகளில் கால்சியத்தை பிணைக்க உதவுகிறது. இந்த கீரைகளை வாரத்தில் 3 அல்லது 4 முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
சால்மன், சார்டின்ஸ் போன்ற கொழுப்பு மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. மீன் எண்ணெய் (Fish Oil) எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்துகிறது. வாரத்தில் இரண்டு முறை மீன் சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.
வேர்க்கடலை, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளில் கால்சியம், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. அவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்கின்றன. அதேபோல், கடலை, உளுந்து, கொள்ளு போன்ற பருப்பு வகைகளும் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. வைட்டமின் டி, கால்சியத்தை உடலில் உறிஞ்ச உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது எலும்புகளின் வலிமையை பராமரிக்கும்.
எள் மற்றும் சூரியகாந்தி விதைகளில் கால்சியம், மக்னீசியம் மற்றும் துத்தநாகம் உள்ளது. இவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கின்றன. தினமும் ஒரு ஸ்பூன் எள் விதைகளை உணவில் சேர்த்தால் எலும்பு வலிமை குறையாமல் இருக்கும்.
மேலும் படிக்க: நாவல் பழம் சாப்பிட்டால் என்ன ஆகும்? யாரெல்லாம் சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிட வேண்டும்
அந்த வரிசையில் எலும்புகளை வலுப்படுத்த, கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும். மேலே குறிப்பிட்ட 6 சூப்பர் உணவுகளை தினசரி உணவில் சேர்த்தால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் (ஆஸ்டியோபோரோசிஸ்) போன்ற நிலைமைகள் குறையும். மேலும் உடற்பயிற்சி மற்றும் சூரிய ஒளியுடன் இவற்றை இணைத்தால், எலும்புகள் இன்னும் வலிமையாக இருக்கும்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]