பெண்கள் பலருக்கும் சமையல் செய்வது மிகவும் பிடித்த விஷயமாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் எளிதில் சமைக்கக்கூடிய உணவுகளை தான் நாம் தேர்ந்தெடுப்போம். நம்மில் பலருக்கும் சுவையான உணவு வேண்டும் ஆனால் அதே சமயத்தில் அது எளிய முறையில் சமைக்கும் உணவாக இருக்க வேண்டும். அடுப்பே இல்லாமல் சுவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த லெமன் கொத்தமல்லி போஹா செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: சுவையான ஆரஞ்சு வெண்ணிலா ரைஸ் கீர் ரெசிபி!
வயிற்றுக் கோளாறு பிரச்சனைகள், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், அஜீரண பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த லெமன் கொத்தமல்லி போஹாவை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். உடல் பருமனாக இருப்பவர்கள் தினமும் தவறாமல் இந்த லெமன் கொத்தமல்லி போஹாவை சாப்பிட்டு வந்தால் எளிதில் உடல் எடை குறையும். இதில் கலோரிகள் மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு அவல். வளரும் குழந்தைகளுக்கு இதை காலை உணவாக கொடுக்கலாம். இந்த அவலில் உள்ள வைட்டமின் பி1, வைட்டமின் பி3, வைட்டமின் பி6, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. அதேபோல இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் நம் இதயத்தை பாதுகாத்து இதய நோய் ஏற்படும் அபாயத்தை தடுக்க உதவுகிறது.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]