தென்னிந்திய சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று “பச்சை மிளகாய்". உணவில் காரத்தை சேர்க்க பச்சை மிளகாய் பயன்படுத்தப்படுகிறது. குழம்பு, பொரியல், கூட்டு, சட்னி என எல்லாவிதமான உணவிலும் பச்சை மிளகாயை சேர்கிறோம். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், பச்சை மிளகாய் நம்ம ஊருக்கு எப்படி வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?
பச்சை மிளகாய் கிமு 7000ல் மெக்சிகோ மாகாணத்தில் முதன் முதலாகப் பயிரிடப்பட்டது. ஆரம்ப காலத்தில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த மக்கள் மட்டுமே இதைப் பயன்படுத்தினர். இத்தாலிய கடற்படையினர் இந்தியா வருவதற்கான கடற்வழியை தேடி அமெரிக்கா வந்தடைந்தபோது, உலகின் பிற பகுதி மக்களுக்கும் பச்சை மிளகாய் பற்றித் தெரிய வந்தது. அங்குள்ள மக்கள் பச்சை மிளகாயை ருசித்தபோது அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. பின்பு ஒவ்வொரு ஐரோப்பிய உணவு வகைகளிலும் மிளகாய் சேர்க்கப்பட்டது.
இந்த தகவல் நிச்சயம் உங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். இந்தியாவுக்கு பச்சை மிளகாயை கொண்டு வந்ததவர்கள் போர்ச்சுகீசியர்கள். அந்த காலத்தில் பச்சை மிளகாய்கள் அனைத்தும் ‘சீமை மிளகாய்கள்’ என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்திலும் பச்சை மிளகாய்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டன. பலரும் தங்களது மொழியில் பச்சை மிளகாய்க்கு பெயர் வைத்தனர். ஆனால் பெரும்பாலானோர் இதை பச்சை மிளகாய் என்றே அழைத்தனர்.
நாட்டிலேயே, ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தான் அதிகப்படியான பச்சை மிளகாய் பயிரிடப்படுகிறது. 30 முதல் 40 சதவீதம் மிளகாய் உற்பத்தி இங்கு தான் நடக்கிறது. பச்சை மிளகாயை பயிரிடுவது மிகவும் எளிதான காரியம். வீட்டில் தொட்டி வைத்துக் கூட பச்சை மிளகாயை பயிரிடலாம். கிட்டத்தட்ட 400 வகையான பச்சை மிளகாய்கள் இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் பச்சை மிளகாயை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் சருமம் அழகாக மாறும். மேலும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும், மூளையை நிதானமாக செயல்பட வைக்கவும் பச்சை மிளகாயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]