கேரட் என்பது கிட்டத்தட்ட அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு காய்கறி. அதனால்தான் அதன் சீசன் வந்தவுடன் பல வகையான கேரட்கள் கடைகளில் வர ஆரம்பித்துவிடுகிறது. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப அனைத்து வகையான கேரட்களையும் வாங்கலாம், ஆனால் சில சமயங்களில் எந்த கேரட் நல்லது, எந்த கேரட் இனிப்பாக இருக்கும் அல்லது என்ன வகையான கேரட் இது என்று கண்டுபிடிப்பதே சற்று கடினமாக இருக்கும்.
நல்ல கேரட்டை தேர்வு செய்து வாங்குவதே பெரிய சவாலாக உள்ளது. சில நேரங்களில் கேரட் மேலே இருந்து பார்க்க நன்றாக தெரியும், ஆனால் உள்ளே அழுகி இருக்கும். சில நேரங்களில் கேரட்டின் சுவை கசப்பாக இருக்கும்.
எனவே, நாம் கடைகளில் கேரட் வாங்கச் செல்லும் போதெல்லாம், கேரட்டின் எடை, நிறம், தரம் போன்ற சில விஷயங்களைக் கவனித்து நல்ல கேரட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான கேரட்டை வாங்குவது சற்று கடினமாக இருந்தாலும், இந்த குறிப்புகளின் உதவியுடன், தரமற்ற கேரட் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
கேரட் வாங்கும் முன், நாம் என்ன சமைக்க போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
நீங்கள் புட்டிங் அல்லது அல்வா செய்ய கேரட் வாங்கினால், எப்போதும் பெரிய மற்றும் கெட்டியான கேரட்டை தேர்வு செய்து வாங்கவும், ஏனெனில் கெட்டியான கேரட் இனிப்பாக இருக்கும்.
மெல்லிய கேரட் காய்கறிகளில் சேர்த்து சமைக்க ஏற்றதாக இருக்கும். மெல்லிய கேரட் இனிப்பாக இருக்காது, எனவே அது காய்கறியோடு சமைக்க சிறந்தது என்று கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்குவது என தெரியவில்லையா?
ஒரு நல்ல கேரட்டை வாங்க, அதன் நிறத்திலும் கவனம் செலுத்துவது அவசியம்.
அடர் நிற கேரட் நல்லது என்று கூறப்படுகிறது. இருப்பினும் கடைகளில் ஊதா, சிவப்பு, மஞ்சள் என பல வகையான நிறங்களில் கேரட்கள் கிடைக்கிறது, ஆனால் அடர் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற கேரட்களை வாங்குவது சிறந்தது என்று கூறப்படுகிறது.
கேரட்டின் புத்துணர்ச்சியை அதன் இலைகளால் தீர்மானிக்க முடியும், ஏனென்றால் புதிய இலைகள் பச்சை நிறத்தில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
கேரட்டின் மேல் உள்ள இலைகள் நிறமாற்றம் அடைந்தால், அது புதியதாக இல்லை என்று அர்த்தம். அதேசமயம், புதிய கேரட்டை அதன் வாசனையால் கண்டறியலாம். கேரட்டில் இருந்து வாசனை வரவில்லை என்றால், அதை வாங்காமல் இருப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: அடிக்கடி மார்க்கெட்டில் வாங்கும் ஆப்பிளை தரம் பார்த்து வாங்குவது எப்படி?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]